செய்திகள்
கலெக்டர் சிவன் அருள் அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடந்த காட்சி.

ஜவ்வாது மலை வளர்ச்சி திட்ட பணிகள்- அதிகாரிகளிடம் கலெக்டர் ஆலோசனை

Published On 2019-12-11 11:21 GMT   |   Update On 2019-12-11 11:21 GMT
திருப்பத்தூர் தாலுகா ஜவ்வாது மலையில் வளர்ச்சித் திட்டங்கள் குறித்து கலெக்டர் சிவனருள் தலைமையில் அனைத்து துறை அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது.

திருப்பத்தூர்:

திருப்பத்தூர் தாலுகா ஜவ்வாது மலையில் வளர்ச்சித் திட்டங்கள் குறித்து திருப்பத்தூர் கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட கலெக்டர் சிவனருள் தலைமையில் அனைத்து துறை அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது.

ஜவ்வாது மலை புதூர் நாடு பகுதியில் நடைபெறும் வாரசந்தை பெரிய அளவில் உள்ளது. சந்தைக்கு இடத்தை தேர்வு செய்து புதிய வாரசந்தை உருவாக்கி கொடுக்க வேண்டும். இதனால் மலைவாழ் மக்கள் வாழ்வாதாரம் மேம்படும். புதூர் நாடு ஆலயப் பகுதியில் வனத்துறை சார்பில் புதிய பள்ளி கட்டிடங்கள் கட்டப்பட வேண்டும்.வனத்துறை மற்றும் அறநிலையத்துறை சார்பில் காலியாக உள்ள நிலங்களில் பூச்செடிகள் மற்றும் காய்கறிகள் பயிரிட வேண்டும். பல பகுதியில் மூங்கில் காட்டில் உள்ள மூங்கில்கள் உடைந்து கீழே விழுந்துள்ளது. மூங்கில்களை மகளிர் சுய உதவிக்குழுக்கள் மூலம் முறம் கூடை என தயாரிக்க அவர்களுக்கு வழங்கி அதனை விற்பதற்கு சந்தை ஏற்படுத்தித் தரவேண்டும்.

அப்பகுதியில் உள்ள கூட்டுறவு சங்கங்கள் மலைவாழ் மக்கள் வாழ்க்கை மேம்பட வழங்க வேண்டிய பயிர்க் கடன்கள், இதர கடன்களை வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும் வேளாண்மைத் துறையினர் அவர்கள் பயிரிடும் தினை சாமை மலை வாழைப்பழம் ஆகிய விதைகளை உடனடியாக தங்கு தடையின்றி வழங்க வேண்டும்.

தோட்டக்கலை துறை சார்பாக அவர்களுக்கு வேண்டிய காய்கறிகள் பயிரிட வேண்டிய உதவிகள் செய்ய வேண்டும் முதியோர் மற்றும் விதவை தொகைகள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மட்றப்பள்ளியில் இருந்து புதூர் நாடு சிங்காரப்பேட்டை செல்ல அரசு பஸ் ஏற்பாடு செய்ய வேண்டும் பல்வேறு அரசு கட்டிடங்களில் பெயிண்ட் அடிக்காமல் பாழடைந்து காணப்படுகிறது.

உடனடியாக புதுப்பித்து கட்டிடத்திற்கு பெயிண்ட் அடிக்க வேண்டும். ஊரக வளர்ச்சி உதவி இயக்குனர் ஊராட்சிகள் அருண் கூறியதாவது:-

100 நாள் வேலை திட்டத்தில் ரூ.40 லட்சத்தில் வாரசந்தை அமைக்க திட்டம் தயாரித்து உள்ளதாக கூறினர்.

வனத்துறை சார்பிலும் அரசு பள்ளிகளுக்கு நபார்டு மூலம் புதிய கட்டிடம் கட்ட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. காலியிடங்களில் செடிகள் வைக்க ஏற்பாடு செய்யப்படும் என தெரிவித்தனர். அனைத்து துறை சார்பிலும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் எனக் கூறினார்.

Tags:    

Similar News