செய்திகள்
தீக்குளிக்க முயற்சி

மதுரை கலெக்டர் ஆபீசில் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவி தீக்குளிக்க முயற்சி

Published On 2019-12-02 11:38 GMT   |   Update On 2019-12-02 11:38 GMT
கலெக்டர் அலுவலக வளாகத்தில் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

மதுரை:

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே உள்ள செக்கானூரணியை அடுத்துள்ள கிண்ணிமங்கலம் ஊராட்சியைச் சேர்ந்தவர் முத்தையா. இவரது மனைவி விஜயராணி (வயது 43).

ஊராட்சி மன்ற முன்னாள் தலைவரான இவர் இன்று காலை மதுரை கலெக்டர் அலுவலகம் வந்தார். அங்கு மக்கள் குறை தீர்க்கும் முகாம் பகுதிக்குச் சென்றார். அந்த இடத்தின் முன்பு நின்ற விஜயராணி, தனது உடலில் மண்எண்ணை ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதனை அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் கவனித்து விட்டனர்.

அவர்கள் விரைந்து வந்து செயல்பட்டு விஜயராணி தீக்குளிக்க முயன்றதை தடுத்து விட்டனர். இந்த சம்பவத்தால் அந்தப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

தீக்குளிக்க முயன்ற விஜயராணி கூறுகையில், எங்கள் பகுதியில் 150 குடும்பங்கள் வசிக்கின்றன. ஆனால் சுடுகாட்டுக்கு செல்ல பாதை வசதி இல்லை. இதனை கேட்டு பல்வேறு போராட்டங்கள் நடத்தியும் பலன் கிடைக்கவில்லை. இதனால் மனு கொடுக்க வந்தபோது தீக்குளிக்க முயன்றேன் என்றார்.

Tags:    

Similar News