செய்திகள்
கோப்புப்படம்

தர்மபுரி மாவட்டத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட மேலும் 2 டாக்டர்கள் இடமாற்றம்

Published On 2019-11-02 11:13 GMT   |   Update On 2019-11-02 11:13 GMT
தர்மபுரி மாவட்டத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட மேலும் 2 டாக்டர்கள் இடமாற்றம் செய்யப்பட்டனர். இது தவிர மேலும் சில டாக்டர்களுக்கு இடமாற்றம் வரலாம் என்ற பீதி நிலவுகிறது.
தர்மபுரி:

சம்பள உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட டாக்டர்கள் நேற்று தங்கள் போராட்டத்தை வாபஸ் பெற்று வேலைக்கு திரும்பினார்கள்.

தர்மபுரி மாவட்டத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட டாக்டர்கள் சங்கத்தின் மாநில துணை ஒருங்கிணைப்பாளரும், காரிமங்கலத்தில் உள்ள மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலைய டாக்டருமான ரங்கசாமி ஏற்கனவே புதுக்கோட்டை மாவட்டத்திற்கு மாற்றப்பட்டார். மாவட்ட ஒருங்கிணைப்பாளரும், பென்னாகரம் அரசு மருத்துவமனை டாக்டருமான வெங்கடேசன் நாகப்பட்டினம் மாவட்டத்திற்கும், மாநில ஒருங்கிணைப்பாளரும், தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி டாக்டருமான லட்சுமி நரசிம்மன் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடிக்கும் இடமாற்றம் செய்யப்பட்டு இருந்தனர்.

தற்போது மேலும் 2 டாக்டர்கள் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். இலளிகம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் வாசுதேவன் திருவாரூர் மாவட்டத்திற்கும், ஏரியூர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் கங்காதரன் சிவகங்கைக்கும் மாற்றப்பட்டு உள்ளனர்.

இது தவிர மேலும் சில டாக்டர்களுக்கு இடமாற்றம் வரலாம் என்ற பீதி நிலவுகிறது.

வெளி மாவட்டங்களில் இருந்து தர்மபுரிக்கு இடமாற்றம் செய்யப்பட்ட டாக்டர்கள் இங்கு வந்து பதவி ஏற்றுக்கொண்டனர்.
Tags:    

Similar News