செய்திகள்
மின்தடை

மண்ணச்சநல்லூர் பகுதியில் அடிக்கடி மின்தடை ஏற்படுவது ஏன்? அதிகாரிகள் விளக்கம்

Published On 2019-11-02 08:06 GMT   |   Update On 2019-11-02 08:06 GMT
மண்ணச்சநல்லூர் பகுதியில் அடிக்கடி மின்தடை ஏற்படுவது ஏன் என்று அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.
மண்ணச்சநல்லூர்:

மண்ணச்சநல்லூர் சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த 9 நாட்களாக அடிக்கடி மின்சாரம் தடைப்படுவதால் தொழில் நிறுவனங்கள், வியாபார நிறுவனங்கள் , அரிசி ஆலைகள் மற்றும் வீடுகளில் வசிப்போர் மின்சாரமின்றி பெரும் சிரமங்களை சந்தித்து வருகின்றனர். இதுகுறித்து மின்வாரியத்திடம் பொதுமக்கள் விளக்கம் கேட்டனர். அப்போது மின்வாரிய அதிகாரிகள் கூறியதாவது:-

மின்சாரமானது நெய்வேலியிலிருந்து சமயபுரம் துணைமின் நிலையத்திற்கு வந்து அங்கிருந்து பிரித்து மண்ணச்சநல்லூருக்கு வழங்கப்படுகிறது. அங்கிருந்து பிரித்து வழங்கப்படும் மின்சாரமானது கோபால் மகால் எதிரில் உள்ள மின்மாற்றிக்கு வந்து அங்கிருந்து மண்ணச்சநல்லூரின் ஒரு பகுதிக்கு வழங்கப்படுகிறது. மற்ற பகுதிக்கு சிதம்பரநாதன் மருத்துவமனைக்கு அருகிலுள்ள மின்மாற்றி மூலம் வழங்கப்படுகிறது.

இந்த மின்சாரமானது செவ்வாய்க்கிழமை காலை 4 மணி அளவில் சமயபுரத்தில் உள்ள துணை மின் நிலையத்தில் (Transform) மின்மாற்றியில் பழுது ஏற்பட்டது. அந்த பழுது இன்று வரை சீர் செய்யப்படவில்லை. மழை காரணமாக அது தற்காலிகமாக சீர் செய்யப்படாத நிலையில் உள்ளது. இந்த நிலையை சரிசெய்ய மண்ணச்சநல்லூர் மின்சார வாரிய நிர்வாகம் துறையூரில் இருந்தும், சிறுகனூரிலிருந்தும் மின்சாரம் பெற்று வழங்கப்படுகிறது. இந்த மின்சாரமானது தாழ்வு நிலை மின்சாரமாகத்தான் இருக்கும்.

அதுவும் மழை பொழிய ஆரம்பித்து பழுதாகி விட்டது. இந்தப் பழுதை சரி செய்து மின்சாரம் வழங்கப்படும். அங்கிருந்து பெறப்படும் மின்சாரம் குறைந்த வோல்ட் உள்ளது. ஆகையால் மக்கள் வீட்டில் உள்ள மின் மோட்டார்களை இயக்கும்போது மற்ற மின் சாதனங்களை பயன்படுத்த வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்படுகிறது.

சிறுகனூரில் இருந்து பெறப்பட்ட மின்சாரமானது வெங்கங்குடி அருகில் மின்கம்பி அறுந்து விழுந்ததால் அந்த பணியை சரி செய்ய முடியவில்லை. அதனை சரிசெய்து மின்சாரம் சமமாக வழங்கப்படும்.

அதிகத்திறன் கொண்ட மின் சாதனங்களை பயன்படுத்த வேண்டாம் என்று தெரிவித்தனர்.
Tags:    

Similar News