செய்திகள்
தேசிய கொடி

குமரி மாவட்டத்தில் சுதந்திர தினவிழா கொண்டாட்டங்கள்

Published On 2019-08-15 09:58 GMT   |   Update On 2019-08-15 09:58 GMT
இந்தியாவின் 73-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு குமரி மாவட்டத்தில் சுதந்திர தினவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

நாகர்கோவில்:

குமரி மாவட்டத்தில் சுதந்திர தினவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

நாகர்கோவிலில் உள்ள மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நடந்த சுதந்திர தினவிழாவில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்.

நாகர்கோவில் வாட்டர் டேங்க் ரோட்டில் உள்ள எம்.பி. அலுவலகத்தில் வசந்தகுமார் எம்.பி. கொடி ஏற்றி வைத்தார். மாவட்ட தலைவர் ராதாகிருஷ்ணன், நிர்வாகிகள் மகேஷ் லாசர், காலபெருமாள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

காங்கிரஸ் அலுவலகத்தில் நடந்த விழாவில் மாவட்ட தலைவர் ராதாகிருஷ்ணன் கொடியேற்றி வைத்தார். நகர தலைவர் அலெக்ஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

நாகர்கோவிலில் உள்ள பாரதிய ஜனதா அலுவலகத்தில் முன்னாள் மத்திய மந்திரி பொன். ராதாகிருஷ்ணன் கொடி ஏற்றி வைத்தார். பின்னர் நிர்வாகிகளுக்கு இனிப்புகளை வழங்கினார். மாவட்ட தலைவர் முத்து கிருஷ்ணன், நகராட்சி முன்னாள் தலைவி மீனாதேவ் மற்றும் நிர்வாகிகள் தேவ், முத்துராமன், ராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

நாகர்கோவில் ஆவின் பால்பண்ணையில் நடந்த விழாவில் தலைவர் எஸ்.ஏ. அசோகன் கொடி ஏற்றி வைத்து ஊழியர்களுக்கு இனிப்புகளை வழங்கினார்.

பார்வதிபுரம் அரசு உயர் நிலைப்பள்ளியில் நடந்த விழாவில் ரபேகா ரவிஜாய் தேசிய கொடியை ஏற்றிவைத்தார். பள்ளிக்கு அவர் ரூ.6 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பெற்றோர்- ஆசிரியர் கழக தலைவர் பாபு ஆண்டனி, தலைமை ஆசிரியை மேரிஹெலன் பிரேமா மற்றும் பழனிவேல், அன்னசுகிர்தா, ராணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

நாகர்கோவில் குமரி மெட்ரிக் பள்ளியில் தாளாளர் சொக்கலிங்கம் தேசிய கொடி ஏற்றிவைத்தார். இதைத்தொடர்ந்து மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது.

மாணவ, மாணவிகள் யோகா நிகழ்ச்சியை நடத்திக் காட்டினர். சிறந்த மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு கேடயங்களை தாளாளர் சொக்கலிங்கம் வழங்கினார்.

கோட்டார் நாராயணகுரு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பள்ளி தலைவரும், தாளாளருமான நாகராஜன் கொடியேற்றி வைத்தார். விழாவில் பள்ளி மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சி, யோகா நடந்தது.

பள்ளி முதல்வர் அமுதா ஜெயந்த், பள்ளியின் துணைத்தலைவர் கோபாலன், செயலாளர் முத்து, பொருளாளர் நடேஷ், இந்து கல்லூரி ஆட்சி மன்ற குழு உறுப்பினர் கோபாலன், மற்றும் நிர்வாக குழு உறுப்பினர்கள் நாராயணன், அய்யாவு, சோமசுந்தரம், துணை முதல்வர் அவ்வை சிதம்பரம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மயிலாடி மவுண்ட்லிட்ரா பள்ளியில் தாளாளர் தில்லை செல்வம் தலைமையில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. பள்ளி முதல்வர் தீபசெல்வி முன்னிலை வகித்தார்.

ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் வின்சென்ட் தேசிய கொடியேற்றி வைத்தார். இயக்குனர் ஆடல்அரசு சிறப்பு விருந்தினர்களுக்கு பொன்னாடை போர்த்தினார். மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளும் நடந்தது.

Tags:    

Similar News