செய்திகள்

செந்தில் பாலாஜி மோசடி வழக்கை ஏன் சந்திக்க கூடாது? - ஐகோர்ட்டு கேள்வி

Published On 2019-06-11 12:06 GMT   |   Update On 2019-06-11 12:06 GMT
போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்தபோது செந்தில் பாலாஜி மோசடியில் ஈடுபட்டதாக எழுந்த குற்றசாட்டில் முகாந்திரம் உள்ள நிலையில், அவர் ஏன் வழக்கை சந்திக்க கூடாது? என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வியெழுப்பியுள்ளது.
சென்னை:

செந்தில் பாலாஜி கடந்த 2011-2015 ஆண்டு காலக்கட்டத்தில் போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்தார். அப்போது தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் 16 பேருக்கு வேலை வாங்கி தருவதாக கூறி 95 லட்சம் ரூபாய் பெற்றுக் கொண்டு வேலை வாங்கி தராமல் மோசடி செய்ததாக,  செந்தில் பாலாஜி உள்ளிட்ட 3 பேர் மீது சென்னை அம்பத்தூரை சேர்ந்த கணேஷ்குமார் என்பவர் மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார்.

   

இந்நிலையில் மோசடியில் ஈடுபட்டதாக எழுந்த குற்றசாட்டில் முகாந்திரம் உள்ள நிலையில், அவர் ஏன் வழக்கை சந்திக்க கூடாது? என திமுக எம்எல்ஏ செந்தில் பாலாஜிக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வியெழுப்பியுள்ளது. இதுதொடர்பாக செந்தில் பாலாஜி தரப்பு பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.  
Tags:    

Similar News