செய்திகள்

மதுரை பாராளுமன்ற தொகுதி தேர்தலை தள்ளிவைக்க வேண்டும் - ஐகோர்ட்டில் முறையீடு

Published On 2019-03-11 07:03 GMT   |   Update On 2019-03-11 07:19 GMT
மதுரை பாராளுமன்ற தொகுதி தேர்தலை தள்ளிவைக்க வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டில் முறையீடு செய்யப்பட்டுள்ளது. #ParliamentEelection #HCMaduraiBench

மதுரை:

மதுரை ஐகோர்ட்டில் நீதிபதிகள் கிருபாகரன், சுந்தர் ஆகியோர் இன்று வழக்குகளை விசாரித்துக் கொண்டிருந்தனர். அப்போது மதுரையைச் சேர்ந்த வக்கீல் பார்த்தசாரதி ஆஜராகி 'தமிழகத்தில் ஏப்ரல் 18-ந்தேதி பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

அன்றைய தினம் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழாவின் ஒரு பகுதியான தேரோட்டம் நடைபெற உள்ளது.

இந்த நிகழ்ச்சியில் மதுரை மாவட்டம் மற்றும் சுற்றுப்பகுதி மாவட்டங்களில் இருந்து லட்சக்கணக்கானவர்கள் கூடுவார்கள். தேரோட்டம் நடைபெறும் பகுதிகளில் வாக்குச்சாவடிகள் அமைக்கப்படும்.

தேரோட்டம் நடப்பதால் வாக்காளர்கள் அங்கு செல்ல சிரமம் ஏற்படும். மேலும் தேரோட்டத்துக்கும், வாக்குச்சாவடிகளுக்கும் தனித்தனியாக பாதுகாப்பு கொடுப்பதில் நடைமுறை சிக்கல் ஏற்படும்.

எனவே மதுரை பாராளுமன்ற தொகுதியின் தேர்தலை தள்ளிவைக்க தேர்தல் கமி‌ஷனுக்கு உத்தரவிட வேண்டும்' என்றார்.

இதைத்தொடர்ந்து நீதிபதிகள், பார்த்தசாரதியிடம் தங்கள் கோரிக்கையை மனுவாக தாக்கல் செய்தால் நாளை விசாரிக்கப்படும் என தெரிவித்தனர். #ParliamentEelection #HCMaduraiBench

Tags:    

Similar News