செய்திகள்

திருநகரில் கல்லூரி மாணவி காதலனுடன் ஓட்டம்- தந்தை புகார்

Published On 2018-12-02 12:42 GMT   |   Update On 2018-12-02 12:42 GMT
கல்லூரி மாணவி காதலனுடன் சென்று விட்டதாக போலீசில் புகார் செய்யப்பட்டது.

மதுரை:

மதுரை திருநகர் பசும்பொன் நகரைச் சேர்ந்தவர் மாதவன். இவரது மகள் அபிதா (வயது18).

இவர் மன்னர் கல்லூரியில் படித்து வந்தார். அப்போது சக மாணவர் வெங்கடேசன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. இந்த காதல் விவகாரம் அபிதாவின் பெற்றோருக்கு தெரியவர அவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்த நிலையில் வீட்டில் இருந்த அபிதா திடீரென மாயமானார். அவரை பல இடங்களில் தேடியும் தகவல் கிடைக்கவில்லை.

இது குறித்து திருநகர் போலீசில் மாதவன் புகார் செய்தார். அதில், அபிதா காதலனுடன் சென்றிருக்கலாம் என குறிப்பிட்டுள்ளார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News