செய்திகள்

தொண்டியில் விதிமுறை மீறி மினி பஸ்கள் இயக்கப்படுவதால் பொதுமக்கள் அவதி

Published On 2018-11-17 11:43 GMT   |   Update On 2018-11-17 11:43 GMT
தொண்டியில் விதிமுறைகளை மீறி மினி பஸ்கள் இயக்கப்படுவதாகவும் உரிய வழித்தடத்தில் இயக்கவும் அரசுக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தொண்டி:

ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி பேரூராட்சி பகுதியாக உள்ளது. அதனை சுற்றி ஏராளமான கடலோர கிராமங்கள், குக்கிராமங்கள் விவசாய கிராமங்கள் உள்ளன.

பெருகி வரும் மக்கள் தொகையில் கிராமப் புறங்களை நகரத்தோடு இணைக்கும் வகையில் மினி பஸ்கள் இயக்கப்படுகிறது.

ஆனால் தொண்டியில் இருந்து இயக்கப்படும் மினி பஸ்களில் சில பஸ்கள் அரசு நிர்ணயித்த வழித்தடங்களுக்கு பதிலாக அரசு பஸ்கள் செல்லும் சாலையை பயன்படுத்தி வருகின்றன.

இதனால் மாணவ, மாணவிகள் முதல் வயதானோர் வரை மினி பஸ்சின் பயன்களை முழுமையாக அனுபவிக்க முடியாமல் சிரமப்பட்டு வருகின்றனர்.

குறிப்பாக சிறுவயது முதல் 10, 11, 12-ம் வகுப்பு பள்ளி செல்லும், சென்று திரும்பும் மாணவிகள் கிழக்கு கடற்கரை முக்கிய சாலையில் மினி பஸ்சுக்காக காத்திருக்கும் அவல நிலை உள்ளது.

தொண்டியில் கடற்கரை பகுதியில் உள்ள வானிலை ஆராய்ச்சி நிலையம் வழியாக புதுக்குடி விலக்கு, பஸ் நிலையம், பஞ்சாயத்து அலுவலகம், பெருமாள் கோவில், பாவோடி பள்ளிவாசல், பழைய பஸ் நிலையம், வெள்ளை மணல் தெரு, தெற்கு தோப்பு, தோப்பு விலக்கு, நம்புதாளை பஸ் நிறுத்தம், வன்னியர் சாலை, மீனவர் காலனி, முகிழ்தகம் விலக்கு, பகவதிபுரம், முத்தமிழ் நகர், லாஞ்சியடி, சோளியக்குடி தர்கா, சோளியக்குடி, எம்.வி.பட்டினம் என அரசு அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களில் ஒருசில வழித்தடத்தை தவிர கிராமங்களை இணைக்கும் வழித்தடங்களில் செல்வதில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். எனவே சம்பந்தபட்ட துறையினர் அரசு அனுமதித்த வழித்தடத்தை மினி பஸ்கள் பயன்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். #tamilnews
Tags:    

Similar News