செய்திகள்

வியாசர்பாடியில் 6 கார்-ஆட்டோவை நொறுக்கிய ரவுடி கும்பல்

Published On 2018-09-07 07:12 GMT   |   Update On 2018-09-07 07:12 GMT
வியாசர்பாடியில் இரவு நேரங்களில் வீட்டு முன்பு நிறுத்தப்பட்டிருந்த 6 கார், 2 ஆட்டோக்களின் கண்ணாடியை உடைத்த ரவுடி கும்பல் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெரம்பூர்:

வியாசர்பாடி சாஸ்திரி நகர், கக்கன்ஜிநகர் பகுதியில் வசிப்பவர்கள் இரவு நேரங்களில் தங்களது இரு சக்கர வாகனம் மற்றும் கார்களை வீட்டு முன்பு சாலையோரத்தில் நிறுத்துவது வழக்கம்.

நேற்று இரவும் ஏராளமான வாகனங்கள் சாலை ஓரத்தில் நிறுத்தப்பட்டு இருந்தன. நள்ளிரவி 2 மணி அளவில் 10-க்கும் மேற்பட்ட மர்ம நபர்கள் கூச்சலிட்டபடி சாஸ்திரி நகர், கக்கன்ஜி நகர் வழியாக வந்தனர். திடீரென அவர்கள் சாலை ஓரத்தில் நிறுத்தப்பட்டிருந்த கார்கள், ஆட்டோக்களின் கண்ணாடிகளை அடித்து நொறுக்கினர்.

மேலும் மோட்டார் சைக்கிள்களையும் சேதப்படுத்தினர். மொத்தம் 6 கார்கள், 2 ஆட்டோக்களின் கண்ணாடிகள் நொறுக்கப்பட்டிருந்தது. சத்தம் கேட்டு பொதுமக்கள் வந்ததும், ரவுடி கும்பல் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

இதுகுறித்து எம்.கே.பி. நகர் போலீசில் புகார் செய்யப்பட்டது. உதவி கமி‌ஷனர் அழகேசன், இன்ஸ்பெக்டர் ஜோதிலட்சுமி ஆகியோர் விசாரணை நடத்தி வருகிறார்கள். அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து, ரவுடி கும்பல் பற்றிய விவரத்தை சேகரித்து வருகின்றனர். #tamilnews
Tags:    

Similar News