செய்திகள்

ராசிபுரம் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் பருத்தி மூட்டைகள் ஏலம்

Published On 2018-08-28 13:22 GMT   |   Update On 2018-08-28 13:22 GMT
ராசிபுரம் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் 238 பருத்தி மூட்டைகள் ரூ.4 லட்சத்திற்கு ஏலம் விடப்பட்டது.
ராசிபுரம்:

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் சார்பில் அக்கரைப்பட்டியில் உள்ள வேளாண்மை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க வளாகத்தில் பருத்தி ஏலம் நடந்தது.

இந்த ஏலத்திற்கு அக்கரைப்பட்டி, பொரசல் பட்டி, மல்லசமுத்திரம், மாமுண்டி, ராசாபாளையம், மதியம்பட்டி, நத்தமேடு, குருசாமிபாளையம், வெண்ணந்தூர், சவுதாபுரம் உள்பட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் தாங்கள் விளைவித்த சுரபி ரக பருத்தியை ஏலத்திற்கு கொண்டு வந்திருந்தனர்.

இந்த ஏலத்தில் கோவை, அவினாசி, திருப்பூர், ஆத்தூர் மகுடஞ்சாவடி, எடப்பாடி, கொங்கணாபுரம் உள்பட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த வியாபாரிகள் வந்திருந்து ஏலத்தில் பருத்தியை எடுத்தனர்.

இந்த ஏலத்தில் 238 சுரபி ரக பருத்தி மூட்டைகளை விவசாயிகள் கொண்டு வந்திருந்தனர். ஒரு குவிண்டால் சுரபி ரக பருத்தி குறைந்தபட்சமாக ரூ.5666 முதல் அதிகப்பட்சமாக ரூ.6606-க்கு ஏலம் விடப்பட்டது. மொத்தம் 238 பருத்தி மூட்டைகள் ரூ.4 லட்சத்திற்கு ஏலம் விடப்பட்டது.
Tags:    

Similar News