செய்திகள்

மஞ்சூரில் செவ்வாடை பக்தர்கள் கஞ்சிகலய ஊர்வலம்

Published On 2018-08-28 11:43 GMT   |   Update On 2018-08-28 11:43 GMT
நீலகிரி மாவட்டம் மஞ்சூரில் மேல் மருவத்தூர் ஆதிபராசக்தி கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆதிபராசக்தி ஆன்மீக இயக்கம் சார்பில் 4-ம் ஆண்டு ஆடிப்பூர கஞ்சி பெருவிழா நடைபெற்றது.

மஞ்சூர்:

நீலகிரி மாவட்டம் மஞ்சூரில் மேல் மருவத்தூர் ஆதிபராசக்தி கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆதிபராசக்தி ஆன்மீக இயக்கம் சார்பில் 4-ம் ஆண்டு ஆடிப்பூர கஞ்சி பெருவிழா நடைபெற்றது. இதை முன்னிட்டு பராசக்தி அம்மனுக்கு பல்வேறு அபிஷேகங்கள் நடத்தப்பட்டது.

தொடர்ந்து உலக அமைதி, குடும்ப நலன் மற்றும் பருவம் தவறாமல் மழை பெய்யவும், வறட்சி நீங்கி விவசாயம் செழிப்படைய வேண்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

இதை தொடர்ந்து கொட்டரகண்டி முனீஸ்வரர் கோயிலில் சிறப்பு பூஜைகளுடன் மேல் மருவத்தூர் ஆதிபராசக்தி கோயில் நிர்வாகிகள் சாவித்திரியம்மா, சித்தம்மா ஆகியோர் தலைமையில் மஞ்சூர், கரியமலை, தாய்சோலை, தொட்டகம்பை, காந்திபுரம், மேல்குந்தா, எடக்காடு, கொட்டரகண்டி, குந்தா பாலம், பெங்கால்மட்டம் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட செவ்வாடை பக்தர்கள் கஞ்சி கலயங்களை ஏந்தி ஊர்வலம் சென்றனர். ஓம்சக்தி, ஆதிபராசக்தி கோ‌ஷங்களுடன் பக்தர்கள் பலர் தீசட்டிகளை ஏந்தி மணிக்கல் மட்டம், மஞ்சூர்பஜார், மேல்பஜார் வழியாக ஆதிபராசக்தி கோயிலை சென்றடைந்தனர். இதை தொடர்ந்து அன்னதானம் நடைபெற்றது. இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டார்கள். இதற்கான ஏற்பாடுகளை ஆதிபராசக்தி ஆன்மீக இயக்க நிர்வாகிகள் செய்திருந்தனர்.

Tags:    

Similar News