செய்திகள்

வத்தலக்குண்டு பேரூராட்சியில் ஊழியர்கள் மோதல்

Published On 2018-08-20 09:59 GMT   |   Update On 2018-08-20 09:59 GMT
வத்தலக்குண்டு பேரூராட்சியில் ஊழியர்கள் பயங்கரமாக மோதிக்கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

வத்தலக்குண்டு:

வத்தலக்குண்டு மாரியம்மன் கோவில் அருகே பேரூராட்சி அலுவலகம் உள்ளது. இங்கு எலக்ட்ரீசனாக மேல்மந்தை தெருவை சேர்ந்த ரவி என்பவர் பணிபுரிந்து வருகிறார். இதேபோல் பில்கலெக்டராக நாகராஜ் உள்ளார்.

நேற்றிரவு திடீரென ரவி மற்றும் நாகராஜ் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியது.

இதனைதொடர்ந்து ரவியின் ஆதரவாளர்கள் சிலர் நாகராஜை கடுமையாக தாக்கினர். இதில் படுகாயமடைந்த நாகராஜ் தேனி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்கைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த தகராறில் ரவியும் காயமடைந்து வத்தலக்குண்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

தாக்குதலின் போது நாகராஜின் 5 பவுன் தங்கசங்கிலி மற்றும் வரிவசூல் பணம் ரூ.15 ஆயிரம் திருடப்பட்டதாக வத்தலக்குண்டு போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் வழக்குபதிவு செய்து தகராறில் ஈடுபட்ட கும்பலை தேடி வருகின்றனர். இச்சம்பவத்தால் பேரூராட்சி அலுவலத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இரவு நேரத்தில் அலுவலக வளாகத்திற்குள் சமூகவிரோத செயல்கள் நடக்கின்றன. அதிகாரிகள் இதனை கண்டுகொள்ளாமல் உள்ளனர்.

இதனாலேயே நாளுக்குநாள் பிரச்சினை தொடர்ந்து வருகிறது. எனவே மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Tags:    

Similar News