செய்திகள்
மருதூரில் வெள்ளத்தில் மூழ்கிய வாழைகளை படத்தில் காணலாம்.

பாளை அருகே வாழைகள் வெள்ளத்தில் மூழ்கின

Published On 2018-08-17 10:38 GMT   |   Update On 2018-08-17 10:38 GMT
பாபநாசம் அணையில் இருந்து திறந்துவிடப்பட்ட உபரிநீர் மருதூர் அணைநீர் மேட்டுப்பகுதியில் உள்ள வயல்வெளிகளுக்குள் புகுந்ததால் பயிரிடப்பட்டிருந்த வாழைகள் வெள்ளத்தில் மூழ்கின.
செய்துங்கநல்லூர்:

தொடர் மழை காரணமாக பாபநாசம் அணை நிரம்பியது. இதையடுத்து அணையில் இருந்து உபரிநீர் ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. இதன் காரணமாக தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

பாளையை அடுத்த மருதூரில் தாமிரபரணியின் குறுக்கே தடுப்பணை உள்ளது. இதில் அமலைச்செடிகள் நிறைந்து காணப்படுகின்றன. மருதூர் அணைக்கட்டில் இருந்து அப்பகுதியில் உள்ள முக்கவர் சானலில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இந்த கால்வாய் முழுமையாக திறக்கப்படாமல் பகுதி அளவே ‌ஷட்டரை திறந்ததால் அதில் அமலைச்செடிகள் சிக்கிகொண்டன.

இதையடுத்து மருதூர் அணைநீர் மேட்டுப்பகுதியில் உள்ள வயல்வெளிகளுக்குள் புகுந்தது. இதனால் அங்கு பயிரிடப்பட்டிருந்த வாழைகள் வெள்ளத்தில் மூழ்கின. மேலும் கத்தரி உள்ளிட்ட பயிர்களும் சேதமாகின.



Tags:    

Similar News