செய்திகள்

குடவாசலில் பெண்ணை தாக்கிய அண்ணன்-தம்பி கைது

Published On 2018-08-04 09:39 GMT   |   Update On 2018-08-04 09:39 GMT
குடவாசலில் பெண்ணை தாக்கிய சம்பவம் தொடர்பாக போலீசார் அண்ணன்-தம்பியை கைது செய்தனர்.
திருவாரூர்:

திருவாரூர் அருகே குடவாசல் பகுதியை சேர்ந்தவர் முருகேசன். இவரது முதல் மனைவி பவானி. இரண்டாவது மனைவிக்கு அஸ்வின் (வயது12), சுப்பிரமணியன் (15) ஆகிய இரு குழந்தைகள் உள்ளனர். முருகேசன் தனது இரண்டு குழந்தைகளையும் அதே ஊரில் உள்ள தனது தம்பி கண்ணன் என்பவர் வீட்டில் விட்டு வளர்த்து வந்தார்.

இந்நிலையில் இரண்டு குழந்தைகளையும் கண்ணன் குடும்பத்தார் பள்ளிக்கு அனுப்பாமல் வீட்டு வேலைகள் செய்ய வற்புறுத்தியதாக கூறப்படுகிறது. இதை அறிந்த பவானி, கண்ணன் வீட்டிற்கு சென்று இதுபற்றி கேட்ட போது அவர்களிடையே ஏற்பட்ட தகராறில் கண்ணனின் மகன்கள் வீரமணி (23), பிரபாகரன் (25) ஆகிய இருவரும் சேர்ந்து பவானியை தாக்கியதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து அவர் குடவாசல் போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோவன் வழக்கு பதிவு செய்து வீரமணி, பிரபாகரன் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

Tags:    

Similar News