செய்திகள்

நாசரேத் அருகே கட்டிட தொழிலாளர்கள் மோதல்: 3 பேர் மீது வழக்குப்பதிவு

Published On 2018-06-21 14:56 GMT   |   Update On 2018-06-21 14:56 GMT
பணத் தகராறில் கட்டிட தொழிலாளர்கள் மோதிக் கொண்டதில் 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
நாசரேத்:

நாசரேத் அருகே உள்ள மணிநகர் ரைஸ்மில் தெருவை சேர்ந்தவர் ஜெயராஜ் (வயது 49) கட்டிட தொழிலாளி. இவருடன் மேல வெள்ளமடத்தைச் சேர்ந்த நடராஜன் என்பவர் வேலை பார்த்தார். இந்த நிலையில் ஜெயராஜ், நடராஜனுக்கு ரூ.4 ஆயிரம் கடன் கொடுத்தாராம். அதனை திருப்பி கொடுக்காததால் ஜெயராஜ் தனது மருமகன் இசக்கி முத்து என்பவருடன் சென்று பணத்தை கேட்டுள்ளார். 

அப்போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதில் ஜெயராஜ், இசக்கிமுத்து இருவரும் கம்பியால் தாக்கப்பட்டனர். இதுகுறித்து நாசரேத் போலீசில் புகார் செய்யப்பட்டது. சப்- இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் நடராஜன் மீது வழக்குபதிவு செய்தார். 

இதேபோல் நடராஜன் கொடுத்த புகாரில் ஜெயராஜிடம் வாங்கிய பணத்தை 2 மாதத்தில் தருவதாக கூறியிருந்தேன் அதனை அவர் கேட்காமல் என்னை தாக்கியுள்ளார். இதுதொடர்பாக ஜெயராஜ், இசக்கிமுத்து ஆகிய 2 பேர் மீது போலீசார் வழக்குபதிவு செய்தனர்.
Tags:    

Similar News