செய்திகள்

மீன்வளப் பல்கலைக்கழகத்துக்கு ஜெயலலிதா பெயர்

Published On 2018-06-02 01:59 GMT   |   Update On 2018-06-02 01:59 GMT
மீன்வளப் பல்கலைக்கழகத்துக்கு மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. ஆனால், பிப்ரவரி மாதம் சூட்டப்பட்ட பெயர் இப்போதுதான் வெளிவருகிறது.
சென்னை:

தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழகம் 19-6-2012 அன்று நாகப்பட்டினத்தில் ரூ.18 கோடியே 10 லட்சம் செலவில் தொடங்கப்பட்டது. இதற்கு, இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகத்தின் அங்கமான தேசிய வேளாண் கல்வி அங்கீகார குழுவால் கடந்த ஆண்டு (2017) நவம்பர் மாதம் அங்கீகாரம் வழங்கப்பட்டது.

இந்த பல்கலைக்கழகத்தில், மீன்வளக் கல்வி, ஆராய்ச்சி மற்றும் விரிவாக்க கல்வி பயிற்றுவிக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழகத்தை மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா தொடங்கினார். எனவே, அவருக்கு கவுரவம் அளிக்கும் வகையில், இந்த பல்கலைக்கழகத்துக்கு தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீள்வளப் பல்கலைக்கழகம் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இந்த பெயர் மாற்றம் செய்யப்பட்டது தொடர்பாக, இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 16-ந் தேதி அரசாணையும் வெளியிடப்பட்டுள்ளது. ஆனால், பெயர் விவரம் இதுவரை வெளியாகாமல் இருந்து வந்தது.

இந்த நிலையில், சட்டசபையில் நேற்று நடைபெற்ற மீன்வளத்துறை மானியக் கோரிக்கை விவாதத்தில் பேசிய அத்துறையின் அமைச்சர் டி.ஜெயக்குமார் இதை உறுதி செய்தார்.

மீன் வளத்துறையின் கொள்கை விளக்க குறிப்பு புத்தகத்தின் 95-வது பக்கத்தில் தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகம் பற்றி தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

ஆனால், 3 மாதங்களாக இந்த பெயர் மாற்ற விவரம் ஏன் வெளியிடப்படவில்லை? என்பது மர்மமாகவே உள்ளது. #JayalalithaaName
Tags:    

Similar News