செய்திகள்

10-ம் வகுப்பு விடைத்தாள்களை திருத்த மாட்டோம் - தமிழக ஆசிரியர் கூட்டணி அறிவிப்பு

Published On 2018-04-21 08:03 GMT   |   Update On 2018-04-21 08:03 GMT
வருகிற 24-ந் தேதி முதல் 10-ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணியை புறக்கணித்து போராட்டம் நடத்தப் போவதாக தமிழக ஆசிரியர் கூட்டணி அறிவித்துள்ளது. #Teacher

திண்டுக்கல்:

தமிழக ஆசிரியர் கூட்டணியின் ஐம்பெரும் விழா இன்று திண்டுக்கல்லில் நடைபெற்றது. இதில் பங்கேற்பதற்காக அகில இந்திய செயலாளர் அண்ணாமலை திண்டுக்கல் வந்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

கல்வித்துறையில் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். மத்திய அரசு அறிவித்த 7-வது ஊதியக்குழுவை தமிழக அரசு உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைகளை நாங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.

ஆனால் எங்கள் கோரிக்கையை அரசு இது வரை ஏற்கவில்லை. மேலும் தமிழக மக்களின் உணர்வுகளை மதித்து காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என ஆசிரியர் கூட்டணியினர் தொடர்ந்து போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். அதனையும் மத்திய அரசு கண்டுகொள்ளவில்லை.

தமிழக அரசு கல்வி நிலையங்களை மூடும் நடவடிக்கையிலும், ஆசிரியர் பணியிடங்களை குறைக்கும் நடவடிக்கையிலும் ஈடுபட்டு வருகிறது.

இதனை கண்டித்து தமிழகம் முழுவதும் வருகிற 24-ந் தேதி முதல் 10-ம் வகுப்பு விடைத்தாள்கள் திருத்தும் பணியினை புறக்கணித்து போராட்டம் நடத்த உள்ளோம். எங்கள் கோரிக்கை ஏற்கப்படா விட்டால் போராட்டம் மேலும் தீவிரபடுத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறினார். #Teacher

Tags:    

Similar News