செய்திகள்

லாட்டரியில் பரிசு விழுந்ததாக கூறி பெண்ணிடம் ரூ.4¼ லட்சம் மோசடி

Published On 2018-01-21 17:17 GMT   |   Update On 2018-01-21 17:17 GMT
முதுகுளத்தூர் பெண்ணிடம் நூதன முறையில் ரூ.4¼ லட்சம் பணத்தை மோசடி செய்த கும்பலை போலீசார் தேடி வருகிறார்கள்.

முதுகுளத்தூர்:

முதுகுளத்தூர் அருகே உள்ள செல்வநாயகபுரத்தை சேர்ந்தவர் கண்ணன். சிங்கப்பூரில் வேலை செய்து வருகிறார். இவருக்கு சிங்கப்பூரில் உள்ள தனியார் நிறுவனம் மூலம் லாட்டரியில் 47 லட்ச ரூபாய் பரிசு விழுந்ததாகவும், இந்திய ரூபாய் மதிப்பிலேயே வங்கி கணக்குக்கு பரிமாற்றம் செய்து தருவதாகவும் மர்ம கும்பல் ஆசை வார்த்தைகூறி வலை விரித்துள்ளது.

இதனை நம்பிய கண்ணன், மனைவி பரிமளாவின் வங்கி கணக்கிலிருந்து மர்ம நபர்களின் ஸ்டேட் வங்கி கிளை கணக்கிற்கு 19-ந்தேதி 1.90 லட்ச ரூபாயும், அதன்பின் 2.35 லட்சம் ரூபாயும் பணபரிமாற்றம் செய்துள்ளார்.

மூன்று நாட்களாகியும் பரிமளாவின் வங்கி கணக்கில் பணம் வரவாகவில்லை. இதுகுறித்து பரிமளா முதுகுளத்தூர் ஸ்டேட் வங்கி கிளை அதிகாரிகளிடம் விசாரித்தபோது, இது போன்ற பொய் வதந்திகளை நம்பவேண்டாம் எனவும், நீங்கள் பணம் செலுத்திய வங்கி கணக்கில் தற்போது முழுமையாக பணம் இல்லை எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

அதன்பின் தான் 4.25 லட்சம் ரூபாயினை மர்ம கும்பல் அபகரித்துள்ளது தெரியவந்தது. இதுகுறித்து போலீசில் புகார்  அளிக்குமாறு வங்கி அதிகாரிகள் தெரிவித்ததன்பேரில், பரிமளா புகார் அளித்துள்ளார். #tamilnews

Tags:    

Similar News