செய்திகள்

கமல்ஹாசன் அரசியலுக்கு வருவது அவரது விருப்பம்: நாராயணசாமி கருத்து

Published On 2017-07-20 10:01 GMT   |   Update On 2017-07-20 16:42 GMT
நடிகர் கமல்ஹாசன் அரசியலுக்கு வருவது என்பது அவரது விருப்பம். அதை தடுக்கவோ எதிர்க்கவோ கருத்து கூறவோ என்னால் முடியாது என்று புதுச்சேரி முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறி உள்ளார்.
புதுச்சேரி:

புதுவை மணவெளி சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் சார்பாக அரசு கொறடா அனந்தராமன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் முதல்-அமைச்சர் நாராயணசாமி கலந்து கொண்டார். அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

ஜனநாயக ரீதியாக கவர்னருக்கு எதிரான போராட்டம் தொடரும்.

நடிகர் கமல்ஹாசன் அரசியலுக்கு வருவது என்பது அவரது விருப்பம். அதை தடுக்கவோ எதிர்க்கவோ கருத்து கூறவோ என்னால் முடியாது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News