செய்திகள்

தனியார் மருத்துவ கல்லூரிகளில் 50 சதவீத இடங்களை பெற அரசு உத்தரவிட வேண்டும்: அன்பழகன் எம்.எல்.ஏ.

Published On 2017-06-08 11:07 GMT   |   Update On 2017-06-08 11:08 GMT
மத்திய மருத்துவ கவுன்சில் ஆணைப்படி தனியார் மருத்துவ கல்லூரிகளில் 50 சதவீத இடங்களை பெற அரசு உத்தரவிட வேண்டும் என்று அன்பழகன் எம்.எல்.ஏ. வலியுறுத்தி உள்ளார்.
புதுச்சேரி:

புதுவை சட்டசபையில் இன்று பூஜ்ய நேரத்தில் அன்பழகன் எம்.எல்.ஏ. பேசியதாவது:-

தற்போது எம்.பி.பி.எஸ். வகுப்புக்காக தகுதி தேர்வு (நீட் தேர்வில்) நம் மாநிலத்தில் மட்டும் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்வு எழுதி உள்ளனர். இதில், புதுவையில் உள்ள 7 தனியார் மருத்துவ கல்லூரிகளில் மொத்தம் உள்ள 1050 இடங்களில் அரசு ஒதுக்கீடாக 525 இடங்களை சட்டப்படி நாம் பெற வேண்டும்.

கடந்த ஆண்டு நாம் தனியார் மருத்துவ கல்லூரி உரிமையாளர்களிடம் பல்வேறு பஞ்சாயத்துக்களை செய்து 283 இடங்களை பெற்றோம்.

மத்திய மருத்துவ கவுன்சில் ஆணைப்படி இந்த ஆண்டு 50 சதவீத இடங்களை பெற முதல்-அமைச்சர் உடனடியாக உத்தரவிட வேண்டும். ஏற்கனவே கட்டணகுழு சுய உதவி கல்லூரிகளுக்கு எம்.பி.பி.எஸ். கட்டணத்தை நிர்ணயம் செய்துள்ளது.

பல்கலைக்கழக மாணவர்களிடையே மாநில அரசு அணுகி நிகர்நிலை பல்கலைக்கழகத்துக்கு கல்வி கட்டணம் எவ்வளவு என்பதை அறிந்து, சென்டாக் கவுன்சில் நடைபெறுவதற்கு முன் தெரிவிக்க வேண்டும்.

இந்த ஆண்டு எந்த பஞ்சாயத்தும் இல்லாமல் 50 சதவீத இடங்களை எவ்வித குழப்பமும் இல்லாமல் பெற உரிய சட்ட ரீதியான உத்தரவை முதல்- அமைச்சர் பிறப்பிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இது சம்பந்தமாக முதல்-அமைச்சர் நாராயணசாமி பதில் அளிக்கும் போது, எம்.பி.பி.எஸ். வகுப்பில் அரசின் இடஒதுக்கீடு பெறுவதில் மத்திய மருத்துவ கவுன்சில் ஆணைப்படி 50 சதவீத இடங்களை அரசு பெற உரிய நடவடிக்கை எடுக்கும் என பதில் அளித்தார்.
Tags:    

Similar News