செய்திகள்

கொடைக்கானலில் சுற்றுலா இடங்களை பார்க்க அரசு பஸ் வசதி

Published On 2017-04-24 12:25 GMT   |   Update On 2017-04-24 12:25 GMT
கொடைக்கானலில் உள்ள அனைத்து சுற்றுலா இடங்களையும் பார்ப்பதற்கு அரசு பஸ் வசதி செய்யப்பட்டுள்ளதால் சுற்றலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
திண்டுக்கல்:

கொடைக்கானலில் தற்போது கோடை வெயிலை சமாளிக்க தினந்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர்.

இவ்வாறு வரும் பயணிகள் அனைத்து சுற்றுலா இடங்களையும் சுற்றி பார்க்க அரசு பஸ் வசதி செய்து தர வேண்டும் என பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்தனர்.

பில்லர்ராக், கோக்கர்ஸ் வாக், பசுமை பள்ளத்தாக்கு, குணாகுகை, மோயர்பாயிண்ட், குறிஞ்சி ஆண்டவர் கோவில், பிரையண்ட் பூங்கா ஆகிய சுற்றுலா இடங்களுக்கு கொடைக்கானல் பஸ் நிலையத்தில் இருந்து தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் பஸ் வசதி நேற்று முதல் செயல்படத் தொடங்கி உள்ளது.

இதில் சிறுவர்களுக்கு ரூ.40 கட்டணமும், பெரியவர் களுக்கு ரூ.80 கட்டணமும் வசூலிக்கப்படுகிறது. சுற்றுலா இடங்களை பார்த்து விட்டு மீண்டும் பஸ் நிலையத்திலேயே பயணிகள் இறக்கி விடப்படுவார்கள். இந்த பஸ்சில் குறைந்த கட்டணத்தில் சுற்றுலா பயணிகள் அழைத்து செல்லப்படுவதால் அவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கொடைக்கானலில் தற்போது சீசன் தொடங்கி உள்ளதால் தினமும் 2 பஸ்கள் இதுபோல் இயக்கப்படுகின்றன. வரும் மே மாதம் முதல் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை அதிகரிக்கும் என்பதால் அதன் எண்ணிக்கைக்கு ஏற்ப கூடுதல் பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Similar News