செய்திகள்

நீட் தேர்வு - தமிழக மசோதாவுக்கு ஜனாதிபதி ஒப்புதல் பெற்றுத்தாருங்கள்: பிரதமருக்கு தமிழக முதல்வர் கடிதம்

Published On 2017-04-20 13:39 GMT   |   Update On 2017-04-20 13:39 GMT
நீட் தேர்வில் தமிழகத்திற்கு விலக்கு அளிப்பது தொடர்பாக தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட சட்ட மசோதாவுக்கு ஜனாதிபதி ஒப்புதல் பெற்றுத் தர வேண்டும் என்று பிரதமர் மோடி முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கடிதம் மூலம் வலியுறுத்தியுள்ளார்.
சென்னை:

‘நீட்’ தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்ககோரி கடந்த பிப்ரவரி மாதம் சட்டசபையில் ஒருமனதாக மசோதா நிறைவேற்றப்பட்டது. ‘நீட்’ தேர்வினால் கிராமப்புற மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்பதை கருத்தில் கொண்டு இந்த சட்டமசோதா கொண்டு வரப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

இருப்பினும் தற்போது வரை தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கப்படவில்லை. மத்திய அரசும், சுப்ரீம் கோர்ட்டும் இந்த விவகாரத்தில் திட்டவட்டமாக உள்ளது. இதனால் தமிழக மாணவர்கள் குழப்பமான சூழலில் உள்ளனர்.

இந்நிலையில், நீட் தேர்வில் தமிழகத்திற்கு விலக்கு அளிப்பது தொடர்பாக தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட மசோதாவுக்கு ஜனாதிபதி ஒப்புதல் பெற்றுத் தர வேண்டும் என்று பிரதமர் மோடி முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கடிதம் மூலம் வலியுறுத்தியுள்ளார்.

முதல்வர் தமது கடிதத்தில், ’தமிழகத்தில் மருத்துவக்கல்லூரி சேர்க்கையில் வெளிப்படைத்தன்மை தொடர வேண்டும். தமிழகத்தில் நீட் தேர்வால் 98 சதவீதம் மாணவர்கள் பாதிப்படைவார்கள்.
 
மருத்துவக்கல்லூரி மாணவர் சேர்க்கை மசோதாவிற்கு குடியரசுத்தலைவரின் ஒப்புதலை பெற்று வேண்டும். தமிழகத்தில் நீட் தேர்வை தவிர்ப்பது குறித்து பிரதமர் விரைவில் முடிவு எடுக்க வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

Similar News