செய்திகள்

திருவாரூர் அருகே டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு - கலெக்டரிடம் கிராம மக்கள் மனு

Published On 2017-04-07 11:10 GMT   |   Update On 2017-04-07 11:10 GMT
திருவாரூர் அருகே மதுக்கடை திறக்க கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.
திருவாரூர்:

தமிழகம் முழுவதும் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் இருந்த 3,400 மதுக்கடைகள் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுபடி மூடப்பட்டன. அதற்கு பதிலாக வேறு இடங்களில் கடைகள் திறக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். இந்த நிலையில் திருவாரூர் அகரதிருநல்லூர் குடியிருப்பு பகுதியில் டாஸ்மாக் மதுக்கடை திறப்பதற்கான முயற்சி நடைபெற்று வருவதாக தெரிகிறது.

இதற்கு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். அவர்கள் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து கலெக்டர் நிர்மல் ராஜிடம் மனு அளித்தனர். அதில் குடியிருப்பு பகுதியில் டாஸ்மாக் கடை திறக்கப்பட்டால் பெண்கள், மாணவிகள், பொதுமக்களுக்கு அச்சுறுத்தலாக இருக்கும்.

எனவே எக்காரணம் கொண்டும் அகரதிருநல்லூர் குடியிருப்பு பகுதியில் டாஸ்மாக் கடையை திறக்க அனுமதிக்க கூடாது என தெரிவித்துள்ளனர்.

Similar News