செய்திகள்

டெல்லியில் போராடும் விவசாய பிரதிநிதிகளுடன் ஜனாதிபதியை சந்திக்கிறேன்: ஜி.கே.வாசன்

Published On 2017-03-28 06:17 GMT   |   Update On 2017-03-28 07:03 GMT
டெல்லியில் போராடும் விவசாய பிரதிநிதிகளுடன் ஜனாதிபதியை சந்திக்கிறேன் என த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் நிருபர்களிடம் அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.
சென்னை:

டெல்லி ஜந்தர்மந்தர் பகுதியில் கடந்த 15 நாட்களாக போராட்டம் நடத்தி வரும் தமிழக விவசாயிகளை த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் இன்று காலையில் சந்தித்து பேசினார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

நியாயமான கோரிக்கைக்காக தங்கள் உடலை வருத்தி விவசாயிகள் போராடி கொண்டிருக்கிறார்கள். ஆனால் மத்திய அரசும், மாநில அரசும் செவி சாய்க்காமல் மவுனம் காப்பது ஏன்? என்று புரிய வில்லை.


விவசாயிகள் கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி போராட்ட குழுவின் பிரதிநிதிகளோடு இன்று இரவு 7.30 மணிக்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை சந்தித்து பேசுகிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

தி.மு.க. செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவனும் டெல்லி சென்று அங்கு போராடும் தமிழக விவசாயிகளை சந்தித்து பேசினார். அவர்களின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தார்.

Similar News