செய்திகள்

ஓசூரில் பி.எஸ்.என்.எல். ஊழியர் சம்மேளன மாநாடு

Published On 2017-03-27 17:20 GMT   |   Update On 2017-03-27 17:20 GMT
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில், தேசிய தொலைத்தொடர்பு ஊழியர் சம்மேளனத்தின் 6-வது கிளை மாநாடு நடைபெற்றது.

ஓசூர்:

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில், தேசிய தொலைத்தொடர்பு ஊழியர் சம்மேளனத்தின் 6-வது கிளை மாநாடு, மாவட்ட செயற்குழு மற்றும் சேவை கருத்தரங்கம் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

ஓசூரில் தலைமை தொலைபேசி நிலையத்தில் நடந்த மாநாட்டுக்கு கிளை தலைவர்கள் விஸ்வநாதன், சுந்தர் ஆகியோரும் சேவை கருத்தரங்கிற்கு மாநில அமைப்புச் செயலாளர் கண்ணன், மாவட்ட செயற்குழு கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் முனியன் ஆகியோர் தலைமை தாங்கினர்.

கிளை செயலாளர் அமாவாசை வரவேற்று பேசினார். மாவட்ட செயலாளர் சுப்பிரமணி சம்மேளன கொடியை ஏற்றி வைத்தார். இதில் சம்மேளனத்தின் மாநில செயலாளர் கே. நடராஜன், மாநில துணைத்தலைவர் சென்னகேசவன் மற்றும் மாநில நிர்வாகிகள் கலந்து கொண்டு பேசினர்.

செயற்குழு கூட்டத்தில் மாவட்டம் மற்றும் கிளைகளில் உள்ள தீர்க்கப்படாத பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. மேலும் பணிக்குழு மற்றும் சேமநல நிதி, 3-வது ஊதிய மாற்றம் உள்ளிட்ட பொருள்கள் மீது விவாதம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிகளில், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஓசூர் கிளை சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள், உறுப்பினர்கள், முன்னாள் மாவட்ட பொறுப்பாளர்கள் பலரும் கலந்து கொண்டனர். முடிவில் ஓசூர் கிளை பொருளாளர் எல்லப்பா நன்றி கூறினார்.

Similar News