செய்திகள்

தமிழக பட்ஜெட்: மீனவர்களுக்கு மானிய விலையில் 3400 லிட்டர் மண்எண்ணெய்

Published On 2017-03-16 09:33 GMT   |   Update On 2017-03-16 09:33 GMT
மீனவர்களுக்கு மானிய விலையில் வழங்கப்படும் மண் எண்ணெயின் அளவை ஆண்டு ஒன்றிற்கு 3,000 லிட்டரிலிருந்து 3,400 லிட்டராக இந்த அரசு வழங்கும் என்று தமிழக பட்ஜெட் உரையின்போது நிதியமைச்சர் ஜெயக்குமார் அறிவித்தார்.
மீனவ சமுதாயத்தின் கோரிக்கையை ஏற்று, விற்பனை வரியிலிருந்து விலக்களித்து, இயந்திர மீன்பிடிப் படகு ஒன்றிற்கு வழங்கப்படும் டீசலின் அளவை, ஆண்டு ஒன்றிற்கு 15,000 லிட்டரிலிருந்து 18,000 லிட்டராகவும், இயந்திரம் பொருத்தப்பட்ட நாட்டுப்படகு ஒன்றிற்கு வழங்கப்படும் டீசலின் அளவை, ஆண்டு ஒன்றிற்கு 3,600 லிட்டரில் இருந்து 4000 லிட்டராகவும் இந்த அரசு உயர்த்தி வழங்கும்.

மேலும் இயந்திரம் பொருத்தப்பட்ட நாட்டுப்படகு ஒன்றிற்கு லிட்டருக்கு 25 ரூபாய் என்ற மானிய விலையில் வழங்கப்படும் மண்எண்ணெயின் அளவையும், ஆண்டு ஒன்றிற்கு 3,000 லிட்டரிலிருந்து 3,400 லிட்டராக இந்த அரசு உயர்த்தி வழங்கும். இதனால் அரசிற்கு ஆண்டு ஒன்றிற்கு 28 கோடி ரூபாய் கூடுதல் செலவு ஏற்படும்.

இலங்கை அரசால் கைப்பற்றப்பட்ட 18 படகுகள் சீர்செய்து பயன்படுத்த இயலாத அளவிற்கு பாதிப்பிற்குள்ளானதைத் கருத்தில் கொண்டு, இதனால் பாதிக்கப்பட்ட 18 மீனவர்களுக்கு தலா 5 லட்சம் ரூபாய் வீதம் 90 லட்சம் ரூபாயை, ஒரு சிறப்பு உதவியாக இந்த அரசு வழங்க ஆணையிட்டுள்ளது.

Similar News