செய்திகள்

முத்துகிருஷ்ணன் மரணம் தொடர்பாக முழு நீதி விசாரணை நடத்தப்படும்: பொன்.ராதாகிருஷ்ணன்

Published On 2017-03-16 07:55 GMT   |   Update On 2017-03-16 07:55 GMT
ஜேஎன்யூ மாணவர் முத்துகிருஷ்ணன் மரணம் தொடர்பாக முழு நீதி விசாரணை நடத்தப்படும் என மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
சேலம்:

டெல்லியில் இறந்த மாணவர் முத்துகிருஷ்ணன் உடல் இன்று சேலத்தில் உள்ள அவரது வீட்டிற்கு கொண்டு வரப்பட்டது.

மாணவரின் பெற்றோருக்கு ஆறுதல் கூறவும், அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தவும் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் இன்று சேலத்தில் உள்ள அவரது வீட்டிற்கு வந்தார். பின்னர் முத்துக்கிருஷ்ணன் உடலுக்கு அஞ்சலி செலுத்தி விட்டு பெற்றோருக்கு ஆறுதலும் கூறினார்.

பின்னர் பொன்.ராதா கிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:-

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் முத்துகிருஷ்ணன் மர்மமான முறையில் இறந்துள்ளார். ஹோலி பண்டிகை விடுமுறை நாளில் எல்லோரும் சாப்பிட சென்ற நேரத்தில் வெளிநாட்டு மாணவர் ஒருவரது அறையில் தூக்கில் தொங்கிய நிலையில் முத்துகிருஷ்ணன் இறந்துள்ளார். இது குறித்து முழு நீதி விசாரணை நடந்து வருகிறது.


இந்த மாதிரி மரணங்கள் கடந்த 60 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. தற்போது மட்டுமே நடைபெறுவதாக கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. மாணவர் முத்துக்கிருஷ்ணன் இறப்பை சொந்த தம்பி இறந்தது போல கருதுகிறேன்.

பிரேத பரிசோதனை நடந்தபோது நான் கூடவே இருந்தேன். 5 பேர் கொண்ட மருத்துவ குழுவினர் இந்த பிரேத பரிசோதனையை மேற்கொண்டார்கள். இந்த அறிக்கையின்படி முழு நீதி விசாரணை நடத்தப்படும்.

இவ்வாறு மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.

Similar News