செய்திகள்

அய்யம்பாளையத்தில் ஜல்லிக்கட்டு சீறிப்பாய்ந்த காளைகள் முட்டியதில் 21 பேர் காயம்

Published On 2017-02-26 12:15 GMT   |   Update On 2017-02-26 12:15 GMT
அய்யம்பாளையத்தில் ஜல்லிக்கட்டு சீறிப்பாய்ந்த காளைகளை அடக்க முயன்ற 21 வீரர்களுக்கு காயம் ஏற்பட்டன. அவர்களுக்கு உடனடியாக முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

ஆத்தூர்:

திண்டுக்கல் அருகே அய்யம்பாளையத்தில் ஜல்லிகட்டு விழா நடை பெற்றது. ஜல்லிகட்டில் மதுரை, தேனி, கம்பம், நத்தம், சிவகங்கை, புதுக்கோட்டை, திருச்சி போன்ற முக்கிய ஊர்களில் இருந்து 300 காளைகள் பங்கேற்றன. மாடு பிடி வீரர்களாக 220 பேர் கலந்துகொண்டு காளைகளை அடக்கினர். பல காளைகள் பிடிபட்டன. பல காளைகள் பிடிபடவில்லை. ஜல்லிகட்டில் கலந்து கொண்ட மாடுகளுக்கு பரிசு பொருட்களாக அண்டா, பானை, எல்.சி.டி.டிவி, கட்டில், பிரோ, சைக்கில், என பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டன.

மாடு பிடி விரர்களுக்கு இப்பரிசுகளுடன் சேர்த்து தங்க காசு, வெள்ளி காசு வழங்கப்பட்டன. பாதுகாப்பு ஏற்பாட்டில் கூடுதல் எஸ்.பி. மகேஸ்வரன் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டன.

காளைகளை அடக்க முயன்ற 21 வீரர்களுக்கு காயம் ஏற்பட்டன. அவர்களுக்கு உடனடியாக முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

Similar News