செய்திகள்

நெல்லை மாவட்டத்தில் மணல் கடத்திய 3 பேர் கைது

Published On 2017-01-28 13:38 GMT   |   Update On 2017-01-28 13:38 GMT
நெல்லை மாவட்டத்தில் அனுமதி இல்லாமல் மணல் கடத்திய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
நெல்லை:

நெல்லை மாவட்டத்தில் அனுமதி இல்லாமல் மணல் கடத்துபவர்களை பிடித்து நடவடிக்கை எடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விக்ரமன் உத்தரவிட்டார்.
இதைத்தொடர்ந்து பணகுடி போலீசார் தீவிர ரோந்து சென்றனர். அப்போது பணகுடி ஆற்றுப்பகுதியில் இருந்து மினிலாரியில் 1  யூனிட் மணலை கடத்தியது தெரியவந்தது.

உடனடியாக போலீசார் விரைந்து சென்று மணல் கடத்திய பணகுடியைச் சேர்ந்த ஜெனல்ராஜ் (வயது 31) என்பவரை கைது செய்தனர். தப்பிஓடிய குமரன் என்பவரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

இதுபோல கரிவலம்வந்தநல்லூர் ஆற்றுப்பகுதியில் டிராக்டரில் மணல் கடத்தியதை அறிந்த போலீசார் விரைந்து சென்று செந்தட்டியாபுரத்தைச் சேர்ந்த மாசாணம் (36), பாலமுருகன் (22) ஆகிய 2 பேரை கைது செய்தனர். மாரியப்பன் என்பவரை தேடி வருகிறார்கள்.

நான்குநேரியில் உள்ள பெரியகுளத்தில் மினிலாரியில் மணல் அள்ளப்படுவதாக கிராம நிர்வாக அதிகாரி வைகுண்டராஜ் போலீசில் புகார் செய்தார். போலீசார் விரைந்து சென்று மினிலாரியை பறிமுதல் செய்தனர். தப்பி ஓடிய வேப்பங்குளத்தைச் சேர்ந்த ஜெயராஜ் (31) என்பவரை வலைவீசி தேடி வருகிறார்கள்.

Similar News