செய்திகள்

போராட்டம் நடத்தியவர்கள் கலைப்பு: விஜயகாந்த் கண்டனம்

Published On 2017-01-23 08:29 GMT   |   Update On 2017-01-23 08:29 GMT
போராட்டம் நடத்தியவர்களை வலு‌க்கட்டாயமாக அப்புறப்படுத்து‌ம் செயலை அரசு உடனடியாக நிறு‌த்த வேண்டும் என்று விஜயகாந்த் கண்டனம் தெரிவித்து உள்ளார்.
சென்னை:

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: -

சென்னை மாநகரம் முழுவதும் கண்ணீர் புகை குண்டு வீச்சு, போலீசார் தடியடி போன்ற நிகழ்வுகள் நடைபெறுவது வேதனை அளிக்கிறது. இந்த நிகழ்வுகளை பார்க்கும் போது ஆளும்கட்சியின் அணுகுமுறை சரியில்லை என்பதையே நிரூபிக்கிறது.

கடந்த 10 நாட்களுக்கு மேலாக மாணவர்களும், இளைஞர்களும் பெண்களும் பொதுமக்களும் அறவழியில் போராடியதன் விளைவாக மாபெரும் வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை இவர்கள் அடைந்துள்ளனர்.

போராட்டக்காரர்கள் தாங்களாகவே மனம் உவந்து ‌போராட்டத்தை வாபஸ் பெற வேண்டும். வலு‌க்கட்டாயமாக யாரையும் அப்புறப்படுத்து‌ம் செயலை அரசு உடனடியாக நிறு‌த்த வேண்டும். இதை முன்கூட்டியே செய்திருந்தால் அவர்கள் கடலு‌க்குள் இறங்கவேண்டிய நிலை ஏற்பட்டிருக்காது‌. குடியரசு தின அணிவகுப்பும் எந்த இடையூறு‌ம் இல்லாமல் நடைபெற்றிருக்கும், அனைவருக்கும் மகிழ்ச்சி தந்து ‌இந்த போராட்டம் வெற்றி போராட்டமாக நிகழ்த்திய மன நிறைவு ஏற்பட்டிருக்கும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Similar News