செய்திகள்

குன்னத்தில் பீட்டா உருவபொம்மை எரிப்பு

Published On 2017-01-21 15:04 GMT   |   Update On 2017-01-21 15:04 GMT
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்தும், பீட்டா அமைப்பை தடை செய்ய கோரியும் பொதுமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்
குன்னம்:

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள மேலமாத்தூர், குன்னம், துங்கபுரம், புதுவேட்டகுடி, வயலப்பாடி, ஒகளுர், சூ.ஆடுதுறை, திருமாந்துறை, நல்லறிகை உள்ளிட்ட கிராமங்களில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்தும், பீட்டா அமைப்பை தடை செய்ய கோரியும் பொதுமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் ஆங்காங்கே போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. குன்னம் பஸ் நிலையத்தில் சுமார் 100-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மற்றும் கிராம பொது மக்கள் திடீரென பீட்டா அமைப்பை தடை செய்ய வேண்டும் என பீட்டா உருவ பொம்மையை இரண்டு முறை எரித்தும், கால்களால் மிதித்தும் தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தினர். போராட்டக்காரர்களை போலீசார் கட்டுப்படுத்த முடியாமல் திணறினர்.

வேப்பூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் தொடக்க பள்ளி, உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள், ஆசிரியைகள், பள்ளி மாணவ, மாணவிகள் பள்ளி முடிந்ததும் மாலையில் பேரணியாக தங்களது கைகளில் ஜல்லிக்கட்டு வேண்டும் எனவும் பீட்டாவை தடை செய்ய வேண்டும் என வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி சென்றனர். 

Similar News