செய்திகள்

தக்காளி விலை கடும் வீழ்ச்சி: கிலோ ரூ. 6 க்கு விற்பனை

Published On 2016-12-25 08:57 GMT   |   Update On 2016-12-25 08:57 GMT
கோயம்பேட்டில் கடந்த வாரம் 1 கிலோ தக்காளி 30 ரூபாய்க்கு விற்கப்பட்டது. அதன்பிறகு விலை மளமள என குறைந்து இப்போது 1 கிலோ தக்காளி 6 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

சென்னை:

சென்னையில் தக்காளி விலை ‘கிடுகிடு’ என குறைந்து வருகிறது. கோயம்பேட்டில் கடந்த வாரம் 1 கிலோ தக்காளி 30 ரூபாய்க்கு விற்கப்பட்டது. அதன்பிறகு விலை மளமள என குறைந்து இப்போது 1 கிலோ தக்காளி 6 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

கோயம்பேடு மார்க்கெட்டுக்கு ஆந்திரா கர்நாடகா மாநிலங்களில் இருந்து அதிக அளவில் தக்காளி வருவது விலை குறைவதற்கு காரணமாக உள்ளது.

இது குறித்து கோயம்பேடு வியாபாரிகள் சங்க ஆலோசகர் சவுந்தரராஜன் கூறியதாவது:-

ஆந்திர மாநிலம் மதனப் பள்ளி, புங்கலூர் பகுதிகளில் தக்காளி விளைச்சல் அதிகரித்துள்ளதால், கோயம்பேடு மார்க்கெட்டுக்கு தக்காளி வரத்து அதிகம் உள்ளது.

கடந்த வாரம் ஆந்திரா, கர்நாடகா, கிருஷ்ணகிரி பகுதிகளில் இருந்து கோயம்பேடு மார்க்கெட்டுக்கு 60 லாரிகளில் தக்காளி வந்தது. ஆனால் இப்போது 75 லாரிகளில் தக்காளி வருகிறது. இதனால் தக்காளி விலை மளமள என குறைந்து வருகிறது.

கோயம்பேட்டில் 6 ரூபாய்க்கு தக்காளி கொடுப்பதால் மற்ற இடங்களில் உள்ள சில்லரை கடைகளில் 10 ரூபாய்க்கு விற்பார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

Similar News