செய்திகள்

ஜெயலலிதா உடலை சுமந்து செல்ல விமானத்தில் வந்த ராணுவ வண்டி: பிரதமர் மோடி நடவடிக்கை

Published On 2016-12-06 23:59 GMT   |   Update On 2016-12-06 23:59 GMT
பிரதமர் மோடி நடவடிக்கையின் பேரில் ஜெயலலிதா உடலை சுமந்து செல்ல விமானத்தில் வந்த ராணுவ வண்டி
சென்னை:

தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா மரணமடைந்ததை தொடர்ந்து, நேற்று மாலை அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது. அஞ்சலிக்காக அவரது உடல் வைக்கப்பட்டிருந்த ராஜாஜி மண்டபத்தில் இருந்து அடக்கம் செய்யும் இடத்திற்கு கொண்டு செல்ல ராணுவ பீரங்கி வண்டி பயன்படுத்தப்பட்டது.

இந்த ராணுவ வண்டி சென்னையில் கிடையாது. டெல்லியில் தான் இருந்தது. எனவே, இந்த ராணுவ வண்டியை டெல்லியில் இருந்து சென்னை கொண்டுவர மத்திய மந்திரி வெங்கையாநாயுடு நடவடிக்கை மேற்கொண்டார். அவர், பிரதமர் நரேந்திரமோடியிடம் நேரடியாக பேசி இதற்கான அனுமதியை பெற்றார்.

அதனைத் தொடர்ந்து, டெல்லியில் இருந்து ராணுவ வண்டி, சென்னை நோக்கி ராணுவ விமானத்திலேயே சில மணி நேரங்களில் கொண்டுவரப்பட்டது. இறுதிச் சடங்குகள் முடிந்ததும், நேற்று இரவு அந்த ராணுவ வண்டி எம்.எல்.ஏ.க்கள் விடுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

அ.தி.மு.க. தொண்டர்கள் அந்த வண்டியை தொட்டு வணங்கினர். பலர் அந்த வண்டி முன்னால் நின்று செல்போனில் புகைப்படமும் எடுத்துக்கொண்டனர். 

Similar News