செய்திகள்

ஜெயலலிதா உடலுக்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி மலரஞ்சலி

Published On 2016-12-06 10:51 GMT   |   Update On 2016-12-06 16:15 GMT
சென்னை ராஜாஜி அரங்கில் வைக்கப்பட்டுள்ள ஜெயலலிதாவின் உடலுக்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி அஞ்சலி செலுத்தினர்.
சென்னை:

உடல்நலம் பாதிக்கப்பட்டு சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் 70 நாட்களுக்கும் மேலாக தீவிர சிகிச்சை பெற்று வந்த தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா சிகிச்சை பலனின்றி நேற்று இரவு காலமானார்.

ராஜாஜி அரங்கத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்ட அவரது உடலுக்கு இன்று காலை முதலே தலைவர்கள் அஞ்சலி செலுத்திய வண்ணம் உள்ளனர். லட்சக்கணக்கான பொதுமக்களும் ராஜாஜி அரங்க வளாகத்திற்கு திரண்டு வந்து ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்தினர்.

இந்நிலையில், ஜெயலலிதாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி இந்திய விமானப்படைக்கு சொந்தமான தனி விமானம் மூலம் சென்னைக்கு புறப்பட்டு வந்தார். 4.15 மணியளவில் ராஜாஜி அரங்கம் வந்தடைந்த பிரணாப் முகர்ஜி, அங்கு ஜெயலலிதாவின் உடலுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

பிரணாப் முகர்ஜி அஞ்சலி செலுத்தியதும் இறுதி ஊர்வலத்திற்கான ஏற்பாடு செய்யப்பட்டது. ஜெயலலிதா உடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு சென்னை மெரினா கடற்கரையில் உள்ள எம்.ஜி.ஆர். நினைவிட வளாகத்தில் நல்லடக்கம் செய்யப்படுகிறது.

Similar News