செய்திகள்

தங்கம் விலை மேலும் வீழ்ச்சி - சவரனுக்கு ரூ.328 குறைந்தது

Published On 2016-11-24 08:34 GMT   |   Update On 2016-11-24 08:34 GMT
ரூபாய் நோட்டு பிரச்சினையால் தங்கம் விலை சவரனுக்கு ரூ.328 குறைந்தது.
சென்னை:

ஆபரண தங்கத்தின் விலை கடந்த சில தினங்களாக வீழ்ச்சி அடைந்து வருகிறது. ரூபாய் நோட்டு பிரச்சினையால் தங்கம் விலையில் தொடர்ந்து சரிவு காணப்பட்டது.

இன்று காலை தங்கம் விலை பவுனுக்கு ரூ.328 குறைந்தது. ஒரு கிராம் ரூ.2804-க்கும், ஒரு பவுன் ரூ.22,432-க்கும் விற்கப்பட்டது.

இதே போல வெள்ளி விலையும் குறைந்து காணப்பட்டது. ஒரு கிராம் ரூ.43.20 ஆகவும், ஒரு கிலோ ரூ.40,385 ஆகவும் இருந்தது.

Similar News