செய்திகள்

நெல்லை மாவட்டத்தில் கடைகளை உடைத்து திருடிய 4 பேர் கைது

Published On 2016-10-26 15:08 GMT   |   Update On 2016-10-26 15:08 GMT
நெல்லை மாவட்டத்தில் கடைகளை உடைத்து பொருட்கள் திருடிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
நெல்லை:

நெல்லை மாவட்டம் களக்காடு, ஏர்வாடி, மூலக்கரைப்பட்டி, விஜயநாராயணம், வள்ளியூர் ஆகிய பகுதிகளில் மர்ம நபர்கள் கடைகளை உடைத்து திருடி வந்தனர். இது குறித்த புகாரின் பேரில்  மாவட்ட போலீஸ சூப்பிரண்டு விக்ரமன் திருட்டு கும்பலை பிடிக்க களக்காடு போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் ராஜாராம், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் அசோகன் ஆகியோர் கொண்ட தனிப்படை அமைத்து உத்தரவிட்டார்.

தனிப்படையினர் ரோந்து சென்ற போது சந்தேகத்தின் பேரில் இந்திரா காலனியை சேர்ந்த சந்திரகுமார் (வயது 20), கீழ காடுவெட்டி சங்கரபாண்டி (41), மேல காடுவெட்டி இசக்கி பாண்டி (26) மற்றும் முத்துராக்கு (40) ஆகிய 4 பேரை பிடித்து விசாரணை நடத்தினர்.

அப்போது அவர்கள் 4 பேரும் ஒன்றாக சேர்ந்து களக்காடு, மூன்றடைப்பு பகுதியில் கடைகளை உடைத்து பொருட்களை  திருடியது தெரியவந்தது. மேலும் அவர்கள் விஜயநாராயணம் பகுதியில் 2 ஏ.டி.எம். மையங்களை உடைத்து திருட முயற்சி செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவர்களை போலீசார் கைது செய்தனர்.

Similar News