செய்திகள்

வரும் ஆண்டு ஜல்லிக்கட்டை நடத்த பா.ஜ.க. நடவடிக்கை எடுத்து வருகிறது: தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி

Published On 2016-10-22 13:01 GMT   |   Update On 2016-10-22 13:01 GMT
வரும் ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டியை கட்டாயமாக நடத்த பா.ஜ.க. அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருவதாக மாநில தலைவர் தமிழிசை சவுந்தராஜன் தெரிவித்தார்.
மதுரை:

பா.ஜ.க. தமிழ்மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் இன்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு:-

வரும் ஆண்டு ஜல்லிக்கட்டை கட்டாயமாக நடத்த பா.ஜ.க. அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. ஜல்லிக்கட்டு தொடர்பான மசோதாவை நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நிறைவேற்றவும் அரசு முயற்சித்து வருகிறது.

காவிரி விவகாரத்தில் தி.மு.க.வின் அனைத்துக் கட்சி கூட்டம் இப்போதைய சூழ்நிலையில் தேவையில்லை. தமிழகத்தில் தேர்தலை நடுநிலையோடு நடத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஜல்லிக்கட்டுக்கு அனுமதி அளித்து மத்திய அரசு அரசாணை வெளியிட்டது. இதனை ரத்து செய்யக்கோரி இந்திய விலங்குகள் பாதுகாப்பு சங்கங்களின் கூட்டமைப்பு உள்ளிட்ட 4 அமைப்புகள் மற்றும் 9 தனி நபர்கள் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. அதை ஏற்று சுப்ரீம் கோர்ட்டு, ஜல்லிக்கட்டு நடத்த ஜனவரி 14–ந்தேதி இடைக்கால தடை விதித்தது. அத்துடன் இந்த வழக்கு தொடர்பாக பதில் மனு தாக்கல் செய்யுமாறு மத்திய அரசுக்கு உத்தரவிடப்பட்டது. இதனால் இந்த ஆண்டும் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறவில்லை.

சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவை ஏற்று கடந்த ஜூலை மாத இறுதியில் மத்திய அரசு தனது பதில் மனுவை தாக்கல் செய்தது. தமிழக அரசு தரப்பிலும் கூடுதல் ஆவணங்கள் ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்டு உள்ளன. வழக்கின் இறுதி விசாரணை நவம்பர் 9-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Similar News