செய்திகள்

முகூர்த்தநாள் இல்லாததால் காய்கறி-பழங்கள் விலை குறைந்தது

Published On 2016-10-21 07:58 GMT   |   Update On 2016-10-21 07:58 GMT
சுபமுகூர்த்தம் நாட்கள் இல்லாததால் காய்கறி-பழங்கள் விலை குறைந்ததுள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
சென்னை:

சென்னையில் கடந்த 2 நாட்களாக காய்கறி பழங்கள் விலை குறைந்து வருகிறது. கோயம்பேடு மார்க்கெட்டுக்கு ஆந்திரா, கர்நாடக மாநிலங்களில் இருந்து 350க்கும் மேற்பட்ட லாரிகளில் காய்கறிகள் வந்திறங்குகிறது. இது தவிர பெரியபாளையம், ஆரணி, திருவண்ணாமலை, காஞ்சீபுரம், ஒட்டன்சத்திரம், ஓசூர், கிருஷ்ணகிரி பகுதிகளில் இருந்தும் அதிக அளவில் காய்கறிகள் வருகிறது.

சுபமுகூர்த்தம் நாட்கள் இல்லாததால் மார்க்கெட்டில் காய்கறிகள் அதிகம் தேங்குகிறது. இதன் காரணமாக கொள்முதல் செய்யும் இடங்களில் விலையை குறைத்து வியாபாரிகள் வாங்கி வந்து காய்கறிகளை கொடுக்கிறார்கள்.

இதனால் சில்லறை விற்பனை கடைகளில் காய்கறி விலை 20 சதவீதம் வரை குறைந்துள்ளது.

காய்கறி - பழங்கள் விலை குறைந்ததால் விற்பனை அதிகரித்துள்ளதாக அயனா வரம் கடைக்காரர் சாமுவேல் கருத்து தெரிவித்தார்.

Similar News