செய்திகள்

வெள்ளக்கோவிலில் ஆவணங்கள் இல்லாமல் இயங்கும் வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை

Published On 2016-10-11 15:13 GMT   |   Update On 2016-10-11 15:13 GMT
வெள்ளகோவில் பகுதிகளில் உரிய ஆவணங்கள் இல்லாமல் இயங்கும் வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
வெள்ளகோவில்:

சாலையில் ஓடும் வாகனங்களில் உரிய ஆவணங்கள், இன்சூரன்ஸ், வாகனத்தின் பதிவு மற்றும் தகுதி சான்றிதழ், ஓட்டுனர் உரிமம் ஆகியவை சில வாகனங்களில் இருப்பதில்லை.

இப்படி உரிய ஆவணங்கள் இல்லாத வாகனங்கள் ஏதேனும் விபத்திற்குள்ளாகும்போது பாதிக்கப்படுபவர்கள் எந்தவித இழப்பும் கோர முடிவதில்லை. அப்படியே வாகன உரிமையாளர் மீது இழப்பீடு கேட்கும்போது சிரமம் ஏற்படுகிறது.

எனவே இதை கருத்தில் கொண்டு நகர் மற்றும் கிராம பகுதிகளில் அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபடும்போது உரிய ஆவணங்கள் இல்லாமல் ஓடும் வாகனங்களை கண்டறிய முடியும். இது மட்டுமின்றி திருட்டு வாகனங்கள் கண்டுபிடிக்க ஏதுவாக இருக்கும்.

வெள்ளகோவில் பகுதிகளில் அவ்வப்போது விபத்துக்குள்ளாகும் வாகனங்களில் உரிய ஆவணங்கள் இருப்பதில்லை. உரிய ஆவணங்கள் இல்லாத வாகனங்களால் அரசுக்கு வருவாய் இழப்பும் ஏற்படுகிறது.

இதுமட்டுமின்றி செல்போன் பேசிக்கொண்டு ஓட்டும் வாகனங்கள் அதிகமாக விபத்துள்ளாகின்றன. எனவே காவல்துறை மற்றும் போக்குவரத்துதுறை அதிகாரிகள் அவ்வப்போது வாகன சோதனையில் ஈடுபட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Similar News