செய்திகள்

பெரம்பலூரில் மக்கள் நீதிமன்றம் மூலம் 391 வழக்குகளுக்கு தீர்வு

Published On 2016-10-11 14:50 GMT   |   Update On 2016-10-11 14:50 GMT
பெரம்பலூர் மாவட்டத்தில் மக்கள் நீதிமன்றம் மூலம் 391 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு, உரியவர்களிடம் ரூ.49 லட்சத்து 65 ஆயிரத்து 650 வழங்கப்பட்டது.
உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றம், தேசிய மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு வழிகாட்டுதலின்படி, மக்கள் நீதிமன்றம் பெரம்பலூரில் உள்ள மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நடந்தது.

நிகழ்ச்சிக்கு, மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி நசீமாபானு தலைமை தாங்கி, மக்கள் நீதிமன்றத்தை தொடங்கி வைத்தார்.

இந்த மக்கள் நீதிமன்றத்தில், மாவட்ட நீதிபதி சுரேஷ விஸ்வநாத், ஓய்வு பெற்ற தலைமை குற்றவியல் நீதிபதி கண்ணையன், பெரம்பலூர் குற்றவியல் மாஜிஸ்திரேட்டு மோகனப்பிரியா ஆகியோர் கொண்ட அமர்வினர் வழக்குகளை விசாரித்தனர். இதில், 6 மோட்டார் வாகன விபத்து வழக்குகள், 2 சிவில் வழக்குகள், 383 சிறு குற்ற வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு, உரியவர்களிடம் ரூ.49 லட்சத்து 65 ஆயிரத்து 650 வழங்கப்பட்டது.

இதில், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயலாளரும், சார்பு நீதிபதியுமான ஜெயந்தி, மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு நிர்வாக அலுவலர் வெள்ளைச்சாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.

Similar News