செய்திகள்

கோத்தகிரி அருகே தேயிலை தோட்டத்தில் சிறுத்தைப்புலி சாவு

Published On 2016-09-29 17:40 GMT   |   Update On 2016-09-29 17:41 GMT
கோத்தகிரி அருகே தேயிலை தோட்டத்தில் 7 வயது மதிக்கத்தக்க ஆண் சிறுத்தைப்புலி இறந்து கிடந்தது
கோத்தகிரி:

கோத்தகிரி அருகே உள்ள கொட்டநள்ளியில் தனியாருக்கு சொந்தமான தேயிலை தோட்டத்தில் சிறுத்தைப்புலி ஒன்று இறந்து கிடப்பதாக தோட்ட தொழிலாளர்கள் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து, கோத்தகிரி வனச்சரகர் சீனிவாசன், வனவர் தமிழ்மோகன், வனக்காப்பாளர் முருகன் மற்றும் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். முதுமலை புலிகள் காப்பக கால்நடை டாக்டர் விஜயராகவன், கீழ்கோத்தகிரி கால்நடை டாக்டர் ரேவதி ஆகியோர் வரவழைக்கப்பட்டு பிரேத பரிசோதனை நடத்தப்பட்டது. பின்னர் அந்த சிறுத்தைப்புலியின் உடல் தீவைத்து எரிக்கப்பட்டது.

இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில், தேயிலை தோட்டத்தில் இறந்து கிடந்தது 7 வயது மதிக்கத்தக்க ஆண் சிறுத்தைப்புலியாகும். உடல்நலக்குறைவால் சிறுத்தைப்புலி இறந்து இருப்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்து உள்ளது. இருப்பினும் பிரேத பரிசோதனை அறிக்கை கிடைத்த பிறகே உண்மையான காரணம் தெரியவரும் என்று தெரிவித்தனர்.

Similar News