செய்திகள்

ஒடிசாவில் இருந்து நாமக்கல்லுக்கு 2,600 டன் ரேஷன் அரிசி சரக்கு ரெயிலில் வந்தது

Published On 2016-09-26 17:25 GMT   |   Update On 2016-09-26 17:25 GMT
ஒடிசா மாநிலத்தில் இருந்து 42 வேகன்களில் 2,600 டன் ரேஷன் அரிசி சரக்கு ரெயிலில் நாமக்கல் கொண்டு வரப்பட்டது.
நாமக்கல்:

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடைகளுக்கு தேவையான அரிசி, சர்க்கரை, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் கடந்த 2 ஆண்டுகளாக சரக்கு ரெயில் மூலம் வடமாநிலங்களில் இருந்து கொண்டு வரப்படுகிறது.

அந்த வகையில் நேற்று ஒடிசா மாநிலத்தில் இருந்து 42 வேகன்களில் 2,600 டன் ரேஷன் அரிசி சரக்கு ரெயிலில் கொண்டு வரப்பட்டது. இந்த அரிசி மூட்டைகள் 150–க்கும் மேற்பட்ட லாரிகளில் ஏற்றி, நாமக்கல்–திருச்சி சாலையில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கிடங்கிற்கு கொண்டு செல்லப்பட்டன.

Similar News