செய்திகள்

பழனி கோவிலில் 29 நாட்களில் உண்டியல் காணிக்கை மூலம் ரூ. 2 கோடி வருவாய்

Published On 2016-09-10 03:58 GMT   |   Update On 2016-09-10 03:58 GMT
பழனி முருகன் கோவிலில் கடந்த 29 நாட்களில் உண்டியல் மூலம் ரூ. 1 கோடியே 99 லட்சம் வருவாய் கிடைத்துள்ளது.
பழனி:

பழனி முருகன் கோவிலில் கடந்த 29 நாட்களில் உண்டியல் மூலம் ரூ. 1 கோடியே 99 லட்சம் வருவாய் கிடைத்துள்ளது.

பழனி முருகன் கோவிலில் பக்தர்கள் உண்டியல்களில் காணிக்கையாக செலுத்திய தொகைகளை எண்ணும் பணி மலைக்கோவில் கார்த்திகை மண்டபத்தில் நடைபெற்றது. கோவில் இணை ஆணையர் ராஜ மாணிக்கம், உதவி ஆணையர் மேனகா, திண்டுக்கல் இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் சிவலிங்கம், அறநிலையத்துறை ஆய்வாளர் ரவி, முதுநிலை கணக்கு அதிகாரி வீராச்சாமி, மேலாளர் உமா ஆகியோர் முன்னிலையில் உண்டி யல்கள் திறந்து எண்ணும் பணி நடைபெற்றது.

கடந்த மாதம் 11-ந் தேதி முதல் 8-ந் தேதி வரை 29 நாட்களில் உண்டியல்களில் பக்தர்கள் செலுத்திய காணிக்கை தொகை ரூ.1 கோடியே 99 லட்சத்து 46 ஆயிரத்து 397 ஆகும். இவை தவிர தங்கம் 1020 கிராம், வெள்ளி 12200 கிராம், வெளிநாட்டு கரன்சி நோட்டுகள் 963 இருந்தன.

Similar News