செய்திகள்

ஊட்டியில் 2-வது சீசன் விரைவில் தொடக்கம்: கண்காட்சிக்கு தயார் நிலையில் 4 ஆயிரம் மலர்ச்செடிகள்

Published On 2016-08-20 12:05 GMT   |   Update On 2016-08-20 12:05 GMT
ஊட்டியில் இந்த ஆண்டு முதல் சீசன் முடிவடைந்த நிலையில் 2-வது சீசன் இன்னும் 10 நாட்களில் தொடங்க உள்ளது.

ஊட்டி:

நீலகிரி மாவட்டத்தில் ஆண்டு தோறும் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் முதல் சீசனும், 2-வது சீசன் செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் நடைபெறுவது வழக்கம்.

இந்த ஆண்டு முதல் சீசன் முடிவடைந்த நிலையில் 2-வது சீசன் இன்னும் 10 நாட்களில் தொடங்க உள்ளது. 2-வது சீசனுக்காக அரசு தாவரவியல் பூங்கா சீரமைக்கப்பட்டு வருகிறது. புல்தரையை ஊழியர்கள் அழகு படுத்தி வருகிறார்கள்.

4 ஆயிரம் மலர்ச்செடிகள் பூந்தொட்டிகளில் நடவு செய்துள்ளனர். அவைகள் தற்போது பூக்கும் தருவாயில் உள்ளது. 2-வது சீசனுக்கு வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் மற்றும் கல்வி சுற்றுலாவாக மாணவர்கள் அதிகளவில் குவிவார்கள். அவர்களை கவரும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

தெரணி இல்லத்தில் 300 வகையான பூக்காத தாவரங்கள் வைக்கப்பட்டுள்ளது. அழியும் பட்டியலில் உள்ள இந்த தாவரங்கள் வனப்பகுதி மற்றும் நீர்நிலைகளில் இருந்து சேகரித்து தெரணி இல்லதில் வைக்கப்பட்டுள்ளது.

இதைபார்வையிட வரும் ஆராய்ச்சி மாணவர்கள் குறிப்பு எடுத்துச்செல்ல வசதி செய்து தரப்பட்டுள்ளது. 2-வது சீசனுக்காக விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இந்த ஆண்டு அதிகளவில் சுற்றுலா பயணிகள் மற்றும் மாணவர்கள் குவிவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Similar News