செய்திகள்

வீடியோ கான்பரன்சிங் மூலம் ஏனாம், மாகி மக்களிடம் கவர்னர் குறை கேட்டார்

Published On 2016-08-06 07:39 GMT   |   Update On 2016-08-06 07:39 GMT
புதுவை கவர்னர் கிரண்பேடி ஏனாம், மாகி மக்களிடம் வீடியோ கான்பரன்சிங் மூலம் குறைகளை கேட்டறிந்தார்.
புதுச்சேரி:

புதுவை கவர்னர் கிரண்பேடி தினமும் மாலையில் பொதுமக்களிடம் குறைகளை கேட்டு வருகிறார். பல்வேறு பிரச்சினைகளுக்காக பொதுமக்கள் நேரிலும், கோரிக்கை மனுக்கள் மூலமாகவும் கவர்னரை சந்தித்து வருகின்றனர்.

ஒவ்வொரு வெள்ளிக்கிழமை தோறும் மாலை 5 மணி முதல் 5.30 மணி வரை ஏனாம் பகுதி, 5.30 மணி முதல் 6 மணி வரை மாகி ஆகிய பகுதிகளை சேர்ந்த பொதுமக்களிடம் வீடியோ கான்பரன்சிங் மூலம் குறைகள் கேட்கப்படும் என்று அறிவித்து இருந்தார்.

அதன்படி நேற்று மாலை 5 மணியளவில் கவர்னர் கிரண்பேடி புதுவை கவர்னர் மாளிகையில் இருந்து கொண்டு வீடியோ கான்பரன்சிங் மூலம் ஏனாம் பகுதியை சேர்ந்த பொதுமக்களிடம் குறைகளை கேட்டார். இதற்காக ஏனாம் மண்டல அதிகாரி அலுவலகத்தில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

அங்கிருந்து பொதுமக்கள் வீடியோ கான்பரன்சிங் மூலம் குறைகளை தெரிவித்தனர். இதனை கேட்ட கவர்னர் கிரண்பேடி அந்த குறைகளை களைய உரிய நடவடிக்கை எடுக்கும்படி மண்டல அதிகாரிக்கு உத்தரவிட்டார். இதேபோல் மாலை 5.30 மணி முதல் 6 மணி வரை மாகி பகுதியை சேர்ந்த மக்களிடம் வீடியோ கான்பரன்சிங் மூலம் கவர்னர் குறைகளை கேட்டார்.

Similar News