10 ஆண்டுகள் பழமையான சந்தன மரம் வெட்டி கடத்தல்
- அரசுக்கு சொந்தமான இடங்களில் ஏராளமான சந்தன மரங்கள் வளர்க்கப்படுகின்றன.
- கடத்தி சென்ற கும்பலை தேடி வருகிறார்கள்.
கோவை
கோவையில் அரசுக்கு சொந்தமான இடங்கள் மற்றும் வீடுகளில் ஏராளமான சந்தன மரங்கள் வளர்க்கப்படுகின்றன.
இந்த சந்தன மரங்களை குறிவைத்து மர்ம கும்பல் வெட்டி கடத்தி செல்லும் சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சந்தன மரங்களை வெட்டி கடத்தி செல்லும் கும்பலை போலீசார் கைது செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.கோவை திருச்சி ரோட்டில் நெடுஞ் சாலைத்துறை குடியிருப்பு உள்ளது. இந்த குடியிருப்பில் ஏராளமான சந்தன மரங்கள் வளர்க் கப்படுகிறது.
சம்பவத்த ன்று இரவு குடியி ருப்புக்குள் ஒரு கும்பல் அத்துமீறி உள்ளே நுழைந்தனர். அவர்கள் அங்கு இருந்த 10 ஆண்டுகள் பழமையான சந்தன மரத்தை வெட்டி கடத்தி சென்றனர். மறுநாள் காலையில் சந்தனம் மரம் வெட்டி கடத்தப்பட்டு இருப்பதை குடியிருப்பு வாசிகள் பார்த்தனர். பின்னர் இது குறித்து நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர் பசும்பொன்னுக்கு தகவல் தெரிவித்தனர். அவர் இது குறித்து ரேஸ்கோர்ஸ் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
உடனடியாக இன்ஸ்பெக்டர் கிருஷ்ணலீலா தலைமையிலான போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். இது குறித்து ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்குப்பதிவு செய்து நெடுஞ்சாலைத்துறை குடியிருப்புக்குள் நுழைந்து 10 ஆண்டுகள் பழமையான சந்தன மரத்தை வெட்டி கடத்தி சென்ற கும்பலை தேடி வருகிறார்கள்.