லைஃப்ஸ்டைல்

தெரிந்து கொள்வோம்: கல்விக்கடன்

Published On 2017-02-21 02:51 GMT   |   Update On 2017-02-21 02:51 GMT
இந்தியாவிலோ அல்லது வெளிநாட்டிலோ ஒரு கல்வி நிறுவனத்தில் தொழிற்கல்வி அல்லது தொழில்நுட்பக் கல்விக்கு இடம் கிடைத்திருக்கும் பட்சத்தில் இந்திய குடிமக்களுக்கு கல்விக் கடன்கள் கிடைக்கும்.
கல்விக்கடன் குறித்து நிபுணர்கள் கூறும் சில முக்கிய தகவல்களை இங்கே தெரிந்து கொள்ளலாம்.

1. இந்தியாவிலோ அல்லது வெளிநாட்டிலோ ஒரு கல்வி நிறுவனத்தில் தொழிற்கல்வி அல்லது தொழில்நுட்பக் கல்விக்கு இடம் கிடைத்திருக்கும் பட்சத்தில் இந்திய குடிமக்களுக்கு கல்விக் கடன்கள் கிடைக்கும். தகுதி அடிப்படையிலான தேர்வு நடைமுறை ஒன்றின் வாயிலாக இந்த கடன் வசதியை பெற முடியும்.

2. இந்திய வங்கிகள் சங்கத்தின் விதிமுறைகளுக்கு உட்பட்டு, இந்தியாவில் உள்ள கல்லூரி ஒன்றில் பயில்வதானால் ரூ.10 லட்சம் வரையிலும், வெளிநாடுகளில் உள்ள கல்லூரி என்றால் ரூ.20 லட்சம் வரையிலும் வங்கிகள் கல்விக் கடன்களை வழங்குகின்றன.

3. கல்விக் கடனுக்காக விண்ணப்பிக்கும்போது ஒரு துணை விண்ணப்பதாரர் கண்டிப்பாக தேவை. அவர் பெற்றோராகவோ, வாழ்க்கைத் துணைவராகவோ, உடன்பிறப்புகளாகவோ இருக்கலாம்.

4. கல்விக்கடன் ரூ.4 லட்சத்திற்கு குறைவு என்றால் பிணையம் எதுவும் அவசியமில்லை. ரூ.4 லட்சத்திற்கு மேல் என்றால் ஒருவரது தனிப்பட்ட உத்தரவாதம் அவசியம். அவரது வருமானம் மற்றும் கடனை திரும்பச் செலுத்தும் திறன் குறித்து சம்பந்தப்பட்ட வங்கிக்கு திருப்தி இருக்க வேண்டும். கல்விக்கடன் ரூ.7.5 லட்சத்துக்கும் அதிகம் என்றால் கடன் வழங்கும் வங்கிகள், வீடு, நகை போன்ற ஏற்கத்தக்க பிணையம் ஒன்றை கோரும்.

5. படிப்பு முடிந்து 6 மாதங்கள் அல்லது ஓராண்டுக்குப் பிறகு கல்விக் கடனை திரும்பச் செலுத்த தொடங்க வேண்டும். அதுவரையிலான காத்திருப்பு காலத்திற்கு எளிய வட்டி விதிக்கப்படும்.

Similar News