லைஃப்ஸ்டைல்

மனைவி கோபமாக இருக்கும் போது மெசேஜ் அனுப்பாதீங்க

Published On 2016-12-16 02:55 GMT   |   Update On 2016-12-16 02:55 GMT
பல சமயங்களில் காதல், இல்லற உறவில் நாம் அனுப்பும் மெசேஜ்கள் தவறான புரிதலில் தான் நம் துணைகளால் புரிந்துக் கொள்ளப்படுகிறது.
பல சமயங்களில் காதல், இல்லற உறவில் நாம் அனுப்பும் மெசேஜ்கள் தவறான புரிதலில் தான் நம் துணைகளால் புரிந்துக் கொள்ளப்படுகிறது. சண்டை முடிந்து "என்ன பண்ற.." என நீங்கள் சாதாரணமாக கேட்கும் கேள்வி கூட, அதிகார தோரணையில் கேட்பது போல எடுத்துக் கொள்ள படலாம்.

மெசேஜ்களுக்கு உணர்வுகள் இல்லை. அதன் ஸ்மைலிகள் சில சமயங்களில் நக்கலாக கூட எடுத்துக் கொள்ள படலாம். எனவே, உங்கள் மனைவியிடம் முக்கியமான விஷயங்களை பகிர வேண்டும் என்றால் அதை மெசேஜ் மூலமாக பகிர வேண்டாம்...

கோபமாக இருக்கும் போது நீங்கள் உங்கள் துணைக்கு மெசேஜ் அனுப்பவதை விட, கால் செய்து பேசுவது தான் சிறந்தது. மெசேஜ் உணர்வற்றது. அதன் ஸ்மைலி கூட தவறான உணர்வை கொண்டு சேர்க்கும்.

"நீ ஏன் இப்படி பண்ற.." என நீங்கள் சாதாரணமாக அனுப்பும் மெசேஜ் கூட, நீங்கள் ஏதோ கோபத்தில் கொக்கரிப்பது போன்ற உணர்வை உங்கள் துணைக்கு கொண்டு சேர்க்கலாம். புரிதலின்மை உண்டாவதால், வேண்டாத சண்டைகள் தேவை இல்லாமல் பிறக்கும். இதனால், பழைய சண்டைகளை எல்லாம் கிளறி, பொன்னான நேரத்தை நீங்களே பாழாக்கிக் கொள்ள வேண்டாம்.

நீங்கள் ஏதோ, உணர்வில் கூற, அவர்கள் ஏதோ உணர்வில் எடுத்துக் கொள்ள, தவறாக எடுத்துக் கொண்டோமே என்ற மனக்கசப்பு, அல்லது வேண்டாத ஈகோ உங்கள் இருவருக்குள் பிறக்கலாம்.

கோபமாக இருந்தாலும் சரி, சந்தோசமாக இருந்தாலும் சரி, அதை சரியான உணர்வுடன் பகிர, நீங்கள் நேரடியாக கூறலாம். அல்லது முடியாத சமயத்தில் கால் செய்து பகிரலாம். குறுஞ்செய்தி அனுப்புவது, அணுகுண்டுகளாய் கூட வெடிக்கலாம்.

Similar News