லைஃப்ஸ்டைல்

விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்: ரவை இனிப்பு கொழுக்கட்டை

Published On 2017-08-24 08:29 GMT   |   Update On 2017-08-24 08:29 GMT
கொழுக்கட்டையில் பலவகைகள் உள்ளது. இந்த விநயாகர் சதுர்த்திக்கு ரவை, மைதா வைத்து இனிப்பு கொழுக்கட்டை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :

ரவை - ஒரு கப்
மைதா - கால் கப்
வெல்லம் - ஒரு கப்
தேங்காய் துருவல் - அரை கப்
ஏலக்காய்த் தூள் - அரை டீஸ்பூன்
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு



செய்முறை :

ரவையை வெறும் வாணலியில் வறுத்தெடுத்து, பொடித்துக்கொள்ளுங்கள்.

வெல்லத்தில் சிறிதளவு தண்ணீர் சேர்த்து அடுப்பில் கரைந்ததும் வடிகட்டி கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் பொடித்த ரவை, மைதா, தேங்காய் துருவல், ஏலக்காய் தூள், உப்பு, வெல்லப்பாகு சேர்த்து கட்டியாக பிசைந்து கொள்ளவும். பிசைந்த மாவைக் அரைமணி நேரம் ஊறவையுங்கள்.

பிசைந்த மாவில் இருந்து சிறிதளவு எடுத்து கைகளால் பிடித்து வைக்கவும். இவ்வாறு அனைத்து மாவிலும் செய்யவும்.

பிடித்துவைத்த கொழுக்கட்டைகளை இட்லி பாத்திரத்தில் வைத்து 15 நிமிடம் வேக வைத்து எடுத்து பரிமாறவும்.

- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Tags:    

Similar News